• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற காத்திருப்போருக்கு அதிர்ச்சித் தகவல்

கனடா

2024 ஆம் ஆண்டு, ஏப்ரல் 30ஆம் திகதி முதல் கனடாவில் குறிப்பிடத்தக்க நிரந்தர குடியிருப்புக்களுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு(IRCC)தெரிவித்துள்ளது.

அத்தோடு, இந்த கட்டணங்கள் கனடாவின் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் பாதுகாப்பு விதிமுறைகளின் படி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பிப்பவர் மற்றும் அவரது கணவன் அல்லது மனைவிக்கான கட்டணம் 515 கனேடிய டொலர்களிலிருந்து 575 டொலர்களாக அதிகரிக்கப்படவுள்ளது.

அதேவேளை, பெடரல் திறன்மிகுப் பணியாளர்கள், மாகாண நாமினி திட்டம், கியூபெக் திறன்மிகுப் பணியாளர் திட்டம், அட்லாண்டிக் புலம்பெயர்தல் வகுப்பு முதலான திட்டங்களுக்கு விண்ணப்பிப்பவருக்கான கட்டணம் 850 டொலர்களிலிருந்து 950 டொலர்களாக உயர்த்தப்படவுள்ளது.

அத்துடன், அவர்களில் விண்ணப்பிப்பவரின் கணவன் அல்லது மனைவிக்கான கட்டணம் 850 டொலர்களிலிருந்து 950 டொலர்களாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும், குறித்த பிரிவினரின் பிள்ளைகளுக்கான கட்டணமும் 230 டொலர்களிலிருந்து 260 டொலர்களாக உயர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  
 

Leave a Reply