• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மியன்மாரில் 50க்கு மேற்பட்ட இலங்கையர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் -லக்ஷ்மன் கிரியெல்ல

இலங்கை

”மியன்மாரில் சைபர் குற்றவலயத்தில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என எதிர்க்கட்சி கோரிக்கை முன்வைத்துள்ளது.

இதேவேளை அரசாங்கம் இந்த விடயத்தில் அசமந்தபோக்குவடன் செயற்படுவதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார்.

இது குறித்து லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளதாவது”  50க்கு மேற்பட்ட இலங்கைய இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு சென்று மியன்மாரில் சைபர் குற்றவலயத்தில பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இடம்பெற்று சுமார் 4 மாத காலம் கடந்துள்ளது.இலங்கையர்கள் அங்கு எதிர்கொண்டுள்ள இன்னல்கள் தொடர்பில் நாளாந்தம் ஊடகங்கள்வாயிலாக அறிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது. இணைய குற்றச்செயல்களுக்கு அவர்கள் அங்கு பலந்தமாக உள்வாங்கப்பட்டுள்ளனர். எ னவே அரசாங்கம் இந்த விடயத்தில் தலையீடு செய்து அவர்களை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏனென்றால் இந்த விடயத்தில் அரசாங்கம் அசமந்தபோக்குவடன் செயற்படுவதாகவே தெரிகிறது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply