• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கையின் ஆயர்வேத மருத்துத் துறைக்கு உலகநாடுகளில் பாரிய வரவேற்பு -ரமேஷ் பத்திரன

இலங்கை

“இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேசிய ஒளடதங்களுக்கு உலகலாவிய அங்கீகாரத்தை பெறுவதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்” என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

ஆயர்வேத சட்ட ஒழங்குவிதிமுறைகள் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” 62 வருடங்களுக்கு ஆயர்வேத சட்டத்தில் ஒழுங்குவிதிகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மருந்து உற்பத்தி ஒழுங்குமுறை தேசிய மருந்து உற்பத்தி ஒழுங்குமுறை உற்பத்தி ஒழுங்குமுறை மருத்துவ உபகரணங்கள் ஒழுங்குமுறை தேசிய அழகுசாதன உற்பத்திபொருள் ஒழுங்குவிதிகள் ஒளடதங்கள் களஞ்சியப்படுத்தல் ஒழுங்குவிதிகள் ஒளடதங்கள் ஏற்றுமதி இறக்குமதி ஒழுங்குவிதிகள் இவற்றுள் உள்ளடங்குகின்றன.

இதற்கமைய ஆயர்வேத மருந்து பொருட்கள் உற்பத்தி மற்றும் விநியோக ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையினை ஸ்தாபிப்பதற்காக குழு நியமிக்கப்படவுள்ளது.நான்கு குழுக்கள் நியமிக்கப்படவுள்ளன.மருந்து உற்பத்தி தொடர்பான தொழினுட்ப குழு ஆயுர்வேத மருந்து உற்பத்தி மற்றும் களஞ்சியப்படுத்தல் குழு உள்ளிட்ட 4 குழுக்கள் இலங்கையின் சுகாதார சேவைக்கு பாரிய ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றது. இலங்கையின் ஆயர்வேத மருத்துதுறைக்கு உலகநாடுகளில் பாரிய வரவேற்புள்ளன.

தேசிய மருந்து உற்பத்தியாளர்கள் சிக்கல்களையும் எதிர்கொண்டுள்ளனர். இலங்கையில்உற்பத்தி செய்யப்படும் தேசிய ஒளடதங்களுக்கு உலகலாவிய அங்கீகாரத்தை பெறுவதற்கான வசதிகள் இல்லாதுள்ளது.அவற்றை விரைவாக செயற்படுத்த வேண்டும்.

கொரோனா பரவலைக்  கட்டுப்படுத்துவதில் இலங்கை சிறந்த முகாமைத்துவத்தை பேணியிருந்தது. பாராம்பரிய மருத்துவத்தினூடாகவும் பலர் காப்பாற்றப்பட்டனர்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply