• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்காவில் மாயமான 26 வயது இளம்பெண் ஆடையில்லாமல் சடலமாக மீட்பு

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் மாயமான நிலையில், அரிசோனா பாலைவனத்தில் ஆடையின்றி சடலமாக மீட்கப்பட்டார். கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் அமண்டா நெனிகர். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் திகதி அன்று மாயமானார்.
  
அதனைத் தொடர்ந்து, மார்ச் 7ஆம் திகதி அவரது கார் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு 1.5 மைல் தொலைவில், அரிசோனாவின் சிபோலாவுக்கு வெளியே ஒரு மரத்தின் கீழ் அமண்டா உடலில் ஆடையின்றி சடலமாக கிடந்துள்ளார்.

அவரது சடலம் கைப்பற்றப்பட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மரணத்திற்கான காரணம் குறித்து வெளியிடப்படவில்லை.

எனினும் லா பாஸ் கவுண்டி அதிகாரிகள், மரணம் குறித்த கூடுதல் தகவல்களை சேகரிக்க பிரேத பரிசோதனை செய்ய தாங்கள் பணியாற்றி வருவதாக தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், இறப்பதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு அமண்டாவின் 911 அவசர அழைப்பில், அவர் இருக்கும் இடத்தை விளக்க முயன்றது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

Leave a Reply