• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கட்சியின் பதவியில் இருந்து நீக்கியமைக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்- மஹிந்த அமரவீர கடும் விசனம்

இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதவிநிலைகளில் இருந்து நீக்கியமைக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியகுழுகூட்டம் இன்று இடம்பெற்ற நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மற்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோரை கட்சியின் பதவிநிலைகளில் இருந்து நீக்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

இதன்படி கட்சியின் தேசிய அமைப்பாளர் பதிவியில் இருந்து துமிந்த திசாநாயக்க நீக்கப்பட்டுள்ளதுடன் பொருளாளர் பதிவியில் இருந்து லசந்த அழகியவண்ண நீக்கப்பட்டார்.

அத்துடன் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் பதவியில் இருந்து மஹிந்த அமரவீர நீக்கப்பட்டுள்ளார்

இந்த நிலையிலேயே கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளார்

எவ்வாறாயினும் கட்சியின் குறித்த பதவி நிலைகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது
 

Leave a Reply