• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவின் இந்த மாகாணத்தில் சம்பளம் அதிகரிப்பு

கனடா

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் சம்பளங்கள் அதிகரிக்கப்பட உள்ளது.

மாகாணத்தின் குறைந்தபட்ச மணித்தியால சம்பளம் 65 சதங்களினால் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1ம் திகதி முதல் இந்த சம்பள அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இதன்படி தற்பொழுது மணித்தியாலம் ஒன்றுக்கு வழங்கப்படும் 16.55 டொலர் சம்பளம் 17.20 டொலர்களாக அதிகரிக்கப்பட உள்ளது.

நாட்டின் நுகர்வோர் விலைச் சுட்டியின் அடிப்படையில் 3.9 வீதமாக சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒன்றாரியோ மாகாண தொழில், குடிவரவு, பயிற்சி அமைச்சர் டேவிட் பிக்கினி இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

வாரமொன்றுக்கு 40 மணித்தியாலங்கள் வேலை செய்யும் பணியாளர் ஒருவர் 1355 டொலர்கள் வரையில் சம்பளம் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. 
 

Leave a Reply