• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கோப் குழுவில் இருந்து ஐவரே உத்தியோக பூர்வமாகப் பதவி விலகியுள்ளனர்

இலங்கை

கோப் குழுவின் தலைவராக ரோஹித அபேகுணவர்த்தன நியமிக்கப்பட்டதையடுத்து, அந்தக் குழுவிலிருந்து எதிரணி உறுப்பினர்கள் தொடர்ச்சியாக பதவி விலகி வருகின்றனர்.

இந்நிலையில், டிலான் பெரேரா, துமிந்த திசாநாயக்க, எரான் விக்கிரமரத்ன, ளு.ஆ.மரிக்கார் மற்றும் சரித ஹேரத் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே தமது பதவி விலகல் கடிதங்களைக் கையளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுர குமார திசாநாயக்க, வசந்த யாப்பா பண்டார, இரா. சாணக்கியன், தயாசிறி ஜயசேகர, காமினி வலேபொட, ஹேஷா விதானகே ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோப் குழுவிலிருந்து விலகினாலும், இதுவரை உத்தியோகபூர்வமாக எழுத்துமூலம் அறிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எழுத்துமூலம் தெரியப்படுத்தும் வரையில் அவர்களின் பதவி விலகல் செல்லுபடியாகாது என்றும் நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.
31 உறுப்பினர்களைக் கொண்ட கோப் குழுவில், ஆளுங்கட்சியின் சார்பில் 19 பேரும் எதிர்க்கட்சியின் சார்பில் 12 பேரும் நியமிக்கப்படுகின்றனர்.

சில உறுப்பினர்கள் பதவி விலகியதையடுத்து, ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை பதினெட்டாகவும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை எட்டாகவும் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், கோப் குழுவின் கூட்டத்திற்கு 5 உறுப்பினர்கள் மாத்திரம் பங்கேற்பது போதுமானது என நாடாளுமன்றம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply