• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கங்கை அமரன் பாட்டு, அதே மெட்டில் மாற்றி எழுதிய வாலி - செம்ம ஹிட் சாங் பின்னணி

சினிமா

1976-ம் ஆண்டு ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கத்தில் வெளியான பத்ரகாளி படத்திற்கு இளையராஜா இசையமைக்க வாலி பாடல்கள் எழுதியுள்ளார்.

பத்ரகாளி படத்தில் இளையராஜா இசையமைத்த மெட்டுக்கு கங்கை அமரன் முன்பே பாடல் எழுதியிருந்த நிலையில், அதே மெட்டுக்கு கவிஞர் வாலி வித்தயாசமான பாடல் எழுதியிருப்பார்.

1976-ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. இவர் இசையமைத்த 3-வது படம் பத்திரகாளி. 1976-ம் ஆண்டு ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு இசையமைக்க இளையராஜாவிடம் கேட்டுள்ளார். ஆனால் ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கிய முந்தைய அனைத்து படங்களுக்கும் எம்.எஸ்.வி தான் இசையமைத்திருந்தார்.

இதன் காரணமாக இந்த வாய்ப்பினை ஏற்க, இளையராஜா மறுத்துவிட்ட  நிலையில், அவரின் நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் கங்கை அமரன், பாஸ்கர் ஆகியோர் வற்புறுத்தியதை தொடர்ந்து பத்ரகாளி படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் இளையராஜா இசையமைத்த 3-வது படமாகும். பிரமணர் குடுமபத்து கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு வாலி பாடல் எழுதினால் சரியாக இருக்கும் என்று யோசித்த படக்குழு அவரை அனுகியுள்ளனர்.

வாலியும் இந்த படத்திற்கு பாடல் எழுத ஒப்புக்கொண்டுள்ளார். இதுதான் இளையராஜா இசையில் வாலி பாடல் எழுதிய முதல் படம். இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக ‘’கண்ணன் ஒரு கைக்குழந்தை என்ற பாடல் இன்றும் ஒரு சிறப்பான வெற்றிப்பாடலாக அமைந்துள்ளது. இந்த பாடலுக்கான டியூனை கேட்டதும், வாலி தனது ஸ்டைலில் பாடலை எழுத தொடங்கியுள்ளார்.

அப்போது அருகில் கிட்டார் வாசித்துக்கொண்டிருந்த கங்கை அமரனும் பேப்பரில் எதையோ எழுதிக்கொண்டிருந்துள்ளார். பாடலை எழுதி முடித்த வாலி, நீ என்ன எழுதிக்கொண்டு இருந்தாய் என்று கங்கை அமரனிடம் கேட்க, உங்களிடம் தவியாளராக இருக்க சேர வேண்டும் என்று விரும்பினேன். அது இப்போது தான் நடந்துள்ளது. உங்களுடன் இணைந்து நானும் பாடல் எழுதினேன் என்று கூறியுள்ளார்.

அப்படி கங்கை அமரன் எழுதிய பாடல் தான் ‘’கண்ணன் ஒரு கைக்குழந்தை என்ற பாடல். இந்த பாடல் ரொம்ப நல்லாருக்கே என்று வாலி சொல்ல, இந்த பாட்டுக்கு மெட்டை நாங்கள் முன்பே போட்டுவிட்டோம் என்று இளையராஜா கூறியுள்ளார். கங்கை அமரன் ஒரு பாடல் எழுதினால் அதற்கு இளையராஜா இசையமைப்பதும், இளையராஜா மெட்டுக்கு கங்கை அமரன் பாடல் எழுதுவதும் இவர்கள் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே இருந்த வழக்கம்.

அந்த வகையில் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே இந்த மெட்டுக்கு பாடல் எழுதிய கங்கை அமரன், மூன்று தமிழ் காவியமும் முருகனுக்கு தொட்டிலடி, முத்தமிழின் சங்கமமும் முரகனுக்கு கட்டிலடி’’ என்று எழுதியுள்ளார். அப்படி எழுதிய பாடல் தான் ‘’கண்ணன் ஒரு கைக்குழந்தை என்று இருக்கிறது.
 

Leave a Reply