• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புது விருந்து படைத்த எந்திரன் 

சினிமா

2010ல் வெளியான எந்திரன் தமிழ்சினிமா ரசிகர்களுக்கு ஒரு புது விருந்து படைத்தது. இது குறித்து பத்திரிகையாளர் சங்கர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

எந்திரன் படப்பிடிப்பு 2008ல் ஆரம்பித்தது. இந்தப் படத்தில் சூட்டிங் தவிர கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் அதிகமாக இருந்தன. இது ஹாலிவுட் தரத்தில் எடுத்தார் டைரக்டர் ஷங்கர். ஆரம்பத்தில் இந்தப்படத்தோட கதையை சுஜாதா எழுதிய என் இனிய இயந்திராவைத் தான் படமாக எடுக்க இருந்தார்கள். அப்போது கமல் நடிக்க இருந்ததாம்.

அதன்பிறகு ரஜினி என்றதும் அவருக்காகக் கதையில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டதாம். இந்தப்படத்திற்கு வசனம் சுஜாதாவும், அவர் இறந்தபின் மீதமுள்ள காட்சிகளுக்கு மதன் கார்க்கியும் வசனம் எழுதினார்கள். இந்தப்படத்தில் ரஜினிகாந்தின் மேக்கப் ரொம்பவே பேசப்பட்டது. பொதுவாகக் கமலைத் தான் சொல்வார்கள். ஆனால், இந்தப் படத்திற்கு ரஜினிக்கு மேக்கப் போட 6 மணி நேரம் ஆனதாம்.

இந்தப் படத்தில் ரஜினிக்கு முகத்திற்கு மோல்டு எடுத்து எந்திரன் ரஜினிக்காக மேக்கப் போட்டார்களாம். இந்தப்படத்தில் டிரெயின் காட்சி பிரமாதமாக எடுக்கப்பட்டது. ரஜினி காலில் சக்கரம் கட்டிக்கொண்டு தண்டவாளத்தில் வேகமாக ஓடுவார். 

அது நிஜமாகவே எடுக்கப்பட்டதாம். எலெக்ட்ரிக் டிரெயின் மேல் பல்டி அடிச்சி ஓடுவார். மேல 10 ஆயிரம் வோல்ட் கரண்ட் பாயுது. அவ்வளவு ரிஸ்க் எடுத்து நடிச்ச படம். இந்தப் படம் தான் அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் அதிக பொருள்செலவில் எடுக்கப்பட்ட முதல் படம். அதற்கு முன் வந்த சிவாஜியே பிரம்மாண்ட வெற்றியைத் தந்தது. எந்திரனுக்கு அதை விட 3 மடங்கு வெற்றியைக் கொடுத்தது.

அதிக தியேட்டர்கள், அதிக வெளிநாடுகளில் ரிலீஸான படமும் இதுதான். முதன்முறையாக நார்வேயில் பெரிய தியேட்டரில் ரிலீஸானது இந்தப் படம் தான். அதுவரை இந்தியாவில் இருந்தே எந்தப் படமும் ரிலீஸானது கிடையாதாம். எந்திரன் தான் முதல் படமாம். கிட்டத்தட்ட 3000 தியேட்டர்கள்ல எந்திரன் தான் ரிலீஸ் ஆனது.

இந்தப்படத்தில் ரஜினி செய்த சிட்டி ரோபோவாக கொஞ்சம் இன்னோசென்ட்டா நடிச்சிருப்பார். வில்லன் ரோபோ காட்டும் மேனரிசங்கள் வில்லத்தனத்தின் உச்சமாகவே இருக்கும். அதுபோல சயின்டிஸ்ட்டாகவும் நடித்து இருந்தார். இப்படி கதைப்படி ரஜினிக்கு 3 கேரக்டர்கள். அவ்வளவு அற்புதமாக நடித்து இருந்தார். 

முதன்முறையாக இந்தியாவிலேயே ஒரு படம் 375 கோடியை வசூல் பண்ணியதாக அதிகாரப்பூர்வமாக சன்பிக்சர்ஸ் அறிவித்தது என்றால் அது இந்த ஒரு படம் மட்டும் தான். அப்போது வட இந்தியாவில் உள்ள கான், பச்சன் நடிகர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் எல்லாம் ரஜினிக்குக் கீழே தான் என்று பத்திரிகைகளில் எழுதினார்களாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply