• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தலைவர் 171 படம் குறித்த சூப்பரான அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்

சினிமா

தலைவர் 171 படத்துக்கு திரைக்கதை எழுதாமல் ஸ்ருதிஹாசனுடன் லோகேஷ் கனகராஜ் டூயட் பாடுவது, ஐபிஎல் போட்டியை பார்த்து ரசிப்பது என சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று ரஜினிகாந்த் ரசிகர்கள் இனிமேல் பாடல் டீசர் வெளியானது லோகேஷ் கனகராஜ் கண்டபடி திட்டி வந்தனர்.

இனிமேல் பாடல் ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய லோகேஷ் கனகராஜ் தலைவர் 171 படம் குறித்த சூப்பரான அப்டேட்டையும் கொடுத்திருக்கிறார்.

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ என தான் இயக்கும் அத்தனை படங்களையும் வெற்றிப் படமாக மாற்றி வருகிறார்.

லியோ படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினிகாந்த் நடிப்பில் அனிருத் இசையில் அன்பறிவு சண்டைக்காட்சியில் உருவாக உள்ள தலைவர் 171 படத்தை இயக்கி உள்ளார். வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில், நான்கு மாதங்கள் தலைவர் 171 வது படத்திற்கு ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற உள்ளதாகவும் அதன் பின்னர் இந்தாண்டு ஜூன் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாக சுமார் ஒரு வருடம் அல்லது ஒன்றரை வருடத்தில் படத்தை முடித்து ரிலீஸ் செய்வேன் எனக் கூறியுள்ளார்.

மேலும், தலைவர் 171 வது படம் வெளியான அடுத்த ஒரு மாதத்தில் கைதி 2 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் அதன் ஸ்க்ரிப்ட் ஒர்க் எல்லாம் ரெடி என்றும் கூறியுள்ளார். கைதி 2 படத்திற்கு பிறகு ரோலக்ஸ், விக்ரம் 3 படங்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a Reply