• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இளையராஜா பாடல்களின் காப்புரிமை வழக்கில் இருந்து விலகிய நீதிபதி

சினிமா

எக்கோ ரிக்கார்டிங் நிறுவனத்திற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில், தனது பாடல்கள் அனைத்தையும் சி.டி.யாக வெளியிடும் உரிமையை எக்கோ ரிக்கார்டிங் நிறுவனத்துக்கு கொடுத்து, இது சம்பந்தமாக ஒப்பந்தம் போட்டிருந்தேன்.

இதற்காக குறிப்பிட்ட தொகையை பங்கு தொகையாக தர அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் ஒப்பந்தப்படி கடந்த 20 வருடமாக பங்கு தொகை எதுவும் தரப்படவில்லை என்றும் பாடல் மூலம் பல கோடி ரூபாய் சம்பாதித்து மோசடி செய்துவிட்டது என்று இளையராஜா தெரிவித்திருந்தார்.

இந்த புகார் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து எக்கோ நிறுவனத்திடமிருந்து 20 ஆயிரம் சிடிக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து, இளையராஜா அளித்த புகாரில் பதிவான வழக்குகளை ரத்து செய்யக்கோரி எக்கோ நிறுவனம் கடந்த 2010-ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை 2019 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்த உத்தரவு எதிர்த்து, எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கில் இருந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்ரமணியம் இன்று விலகியுள்ளார்.

வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் தலைமை நீதிபதியின் ஒப்புதலை பெற பதிவாளருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். 
 

Leave a Reply