• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜீனி படத்தின் செகண்ட் லுக் வெளியானது

சினிமா

சைரன், அகிலன் , இறைவன் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக அவர் நடித்து கொண்டு இருக்கும் படம் ஜீனி. இப்படத்தின் இரண்டாம் போஸ்டர் இன்று வெளியானது.

இதில் ஒரு அலாவுதீன் பூதத்தைப்போல் தோற்றம் அளித்துள்ளார். கல்யாணி பிரியதர்சன் மற்றும் வாமிகா கபி தேவதை வேடத்தில் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் அலாவுதின் கம்பலத்தில் வானத்தில் பறந்துக் கொண்டு இருக்குமாறு போஸ்டர் வடிவமைத்து இருக்கின்றனர்.

உண்மையில் அவர்கள் எப்பேர்பட்ட கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கிறார் என்று படத்தின் டிரெய்லர் வெளியானால் தான் தெரியும்.

அறிமுக இயக்குனரான புவனேஷ் அர்ஜுனன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரித்து இருக்கிறது.

கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், தேவையாணி போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

ஃபேண்டசி மற்றும் காமெடி கதைக்களத்துடன் அமைந்துள்ள ஜீனி படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் ஜெயம் ரவி திரைப்பயணத்தில் மிகப் பெரிய பொருட் செலவில் எடுக்கப்பட்ட படம்.

படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. 60 கோடிக்கு மேல் ஜீனி படத்தின் டிஜிட்டல் உரிமை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

Leave a Reply