• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை - மேலும் மூவர் கைது

இலங்கை

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞனை கடத்திச் சென்று படுகொலை செய்த குற்றச்சாட்டில் பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் உள்ளிட்ட மூவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் ஏற்கனவே ஆறு பேரை கைதுசெய்திருந்தனர்.

குறித்த 6 பேரும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் இருவரை அடையாள அணிவகுப்பின் போது கொல்லப்பட்ட இளைஞனின் மனைவி அடையாளம் காட்டியிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வரும் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் வவுனியா, ஒட்டுசுட்டான் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் தலைமறைவாகி இருந்த பிரதான நபர்களில் ஒருவர் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் அவர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதேவேளை சந்தேக நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்த நபர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுக்கவுள்ளனர்.

தேடப்படும் சந்தேகநபர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது சிறைத்தண்டனைக்கு உரிய குற்றமாகும். எனவே வட்டுக்கோட்டை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாக்கும் நபர்கள் குறித்து பொலிஸாருக்கு அறிய தருமாறும் பொலிஸார்  பொதுமக்களை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply