• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உலக காச நோய் தினம் இன்று

இலங்கை

உலகம் முழுவதும் வாழும் மக்களிடையே காச நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சர்வதேச காச நோய் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 24 ஆம் திகதி காச நோய் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்த வருடம் ‘ஆம் எங்களால் காச நோயை முடிவுக்கு கொண்டுவர முடியும் ‘ எனும் தொனிப்பொருளில் உலக காச நோய் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கையில் காசநோய் வேகமாகப் பரவி வருவதாகவும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அதிகளவானோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மத்திய மார்பு நோய்களுக்கான சிகிச்சை பிரிவின் மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி வைத்தியர் ஆர்.எம்.எம்.சரத் பண்டார தெரிவித்துள்ளார்.

உமிழ்நீர் மற்றும் சளி மூலமாக பரவக்கூடிய இந்நோய் தற்போது இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் வேகமாகப் பரவி வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை உள்ளிட்ட மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நோய் வேகமாக பரவக் கூடியது என்பதால் வீட்டிலுள்ள ஒருவர் பாதிக்கப்பட்டாலும் முழுக் குடும்ப உறுப்பினர்களையும் பரிசோதிப்பது மிகவும் அவசியம் என கொழும்பு மத்திய மார்பு நோய்களுக்கான சிகிச்சை பிரிவின் மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி வைத்தியர் ஆர்.எம்.எம்.சரத் பண்டார தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply