• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காமினி திஸாநாயக்காவை நினைவு கூர்ந்தார் கரு ஜயசூரிய

இலங்கை

மறைந்த முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்கவின் 82 ஆவது ஜனன தின நிகழ்வு நேற்று, கொழும்பு ஆனந்த குமாரசுவாமி மாவத்தையில் அமைந்துள்ள காமினி திஸாநாயக்கவின் உருவச் சிலைக்கு முன்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய  முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, ”காமினி திஸாநாயக்க  அனைவருக்கும் ஒரு அரசியல் முன்னுதாரணமாகச் செயற்பட்டார் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும்  மக்களுக்கு சேவை செய்வதன் மூலம்தான் அவர் பிரபலமடைந்ததாக சுட்டிக்காட்டிய கரு ஜயசூரிய, அவரின் சரியான முகாமைத்துவம் இலங்கையை துரிதமாக அபிவிருத்தி செய்ய உதவியது என்றும் தெரிவித்திருந்தார்.
 

Leave a Reply