• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அடுத்த படத்தை தொடங்கிய அட்லீ

சினிமா

இயக்குனர் அட்லீ கடந்த வருடம் ஜவான் படத்தின் மூலமாக மிகப்பெரிய ஹிட் கொடுத்தார். அந்த படத்திற்காக அவர் பல வருடம் காத்திருந்து அதன் பின் தான் முழு படத்தையும் இயக்கி ஹிட் கொடுத்தார்.
  
சுமார் 1150 கோடி ருபாய் வசூலித்து சாதனை படைத்தது இந்த படம். அடுத்து அட்லீ அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தினை இயக்கப்போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த படத்திற்காக 60 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார் என்றும் ஒரு தகவல் சில தினங்களுக்கு முன்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அட்லீ தனது 6வது படத்திற்கான பணிகளை தொடங்கி இருக்கிறார். அவர் ஸ்டோரி டிஸ்கஷனில் இருக்கும் வீடியோவை மனைவி பிரியா வெளியிட்டு இருக்கிறார். 
 

Leave a Reply