• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாபா பட ஷூட்டிங்கில் நடந்த பரபர சம்பவம்..

சினிமா

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருந்து அரசியலிலும் சிறந்த ஆளுமையாக மாறி கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி மறைந்து போனார் நடிகர் விஜயகாந்த். இவர் நடிக்க ஆரம்பித்த காலத்தில் பட்ட கஷ்டங்கள் ஏராளம். ஆனால் அப்படி ஒரு அவமானங்களையும், கஷ்டங்களையும் விஜயகாந்த் சந்தித்து இருந்த போதிலும் தான் உயர்ந்த பின்னர் யாரிடமும் அதனை காட்டாமல் தனக்கு நிகழ்ந்தது யாருக்கும் நடந்து விடக்கூடாது என அனைவரையுமே சமமாக சினிமாவில் நடத்தி இருந்தார்.

தான் உண்ணும் உணவை கடைகோடி ஊழியன் வரை சினிமாவில் உண்ண வேண்டும் என்பதுடன் தன்னைத் தேடி வீட்டிற்கோ அலுவலகத்திற்கோ யார் வந்தாலும் அவர்களுகு சாப்பாடு போட்டு அனுப்புவதையும் கேப்டன் வழக்கமாகக் கொண்டிருந்தார். அது மட்டுமில்லாமல் அரசியலில் நுழைந்த குறுகிய காலத்திலேயே எதிர்க்கட்சி தலைவராகவும் மாறி இருந்த விஜயகாந்த், முதலமைச்சராகவும் மாறுவார் என எதிர்பார்த்த நிலையில் தான் அவரது உடல்நிலை திடீரென மோசமாக தொடங்கியது.

நாளுக்கு நாள் அவரது உடல்நலத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் போக பொது இடங்களில் வருவதையும் தவிர்த்து இருந்தார். நடக்கவும், பேசவும் மிகவும் சம சிரமப்பட்ட விஜயகாந்த் சிகிச்சை பலனளிக்காமல் இறுதியில் மறைந்தும் போனார். ஒரு காலத்தில் மிகவும் கம்பீரமான குரலுடன் நெஞ்சை நிமிர்த்தி நடை போட்ட விஜயகாந்த், இப்படி ஒரு உடல்நிலை குறைவால் இறந்து போன விஷயம் பலரையும் கண்ணீரில் ஆழ்த்தி இருந்தது.

இந்த நிலையில் விஜயகாந்த் உயிரோடு இருந்த சமயத்தில் நடந்த ஒரு பரபரப்பான சம்பவம் குறித்து நடிகர் டெல்லி கணேஷ் ஒரு நிகழ்ச்சியில் கூறிய விஷயம் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது. இது பற்றி பேசி இருந்த டெல்லி கணேஷ், “பாபா படத்தின் சூட்டிங்கின் போது ரஜினி உட்பட நாங்கள் அனைவரும் சிவாஜி கார்டனில் இருந்தோம். அந்த சமயத்தில் கார் ஒன்று வர ஒருத்தர் எங்களைப் பார்த்து அடிக்க வருவதை போலவே வந்து கொண்டிருந்தார்.

இதை பார்த்தவுடன் ரஜினி ஒரு நிமிடம் பதறிப் போய்விட்டார். நான் சொல்லும் விஷயம் சத்தியமாக நடந்தது. அவர்கள் அனைவரும் ஒரு கூட்டமாக ஒயிட் அம்பாசிடரில் இருந்து இறங்கியதை கண்டு யார் இது யார் இது என கேட்டு ரஜினி ஒரு நிமிடம் பதறியே போய்விட்டார். விஜயகாந்த் என தெரிந்த பின்பும் ரஜினியின் பதற்றம் அப்படியேதான் இருந்தது.

ரஜினியை பார்த்ததும் கலை நிகழ்ச்சி நடத்துவதற்காக சிங்கப்பூர், மலேசியா போவதாக தெரிவித்தார் விஜயகாந்த். கமலும் வருவதாக அவர் குறிப்பிட, ‘நான் வருகிறேன், வருகிறேன்’ என ரஜினியும் கூறினார். விஜயகாந்த் ஒரு முறை தான் அழைத்தார். ஆனால் ரஜினி 100 தடவை நான் வருகிறேன் வருகிறேன் என்று சொன்னார்” என டெல்லி கணேஷ் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply