• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வரும் திரைப்படம் கோட்

சினிமா

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் படத்தின் பாடல் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது.

விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வரும் திரைப்படம் கோட். பிரசாந்த், சினேகா, பிரபுதேவா, லைலா, அஜ்மல் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். சயின்ஸ் பிக்‌ஷன் கதையாக உருவாகும் கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகள் லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்க இருக்கிறது. 

இப்படத்தின் படப்பிடிப்புகள் இந்த மாத இறுதிக்குள் முடிந்து விடும் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது. படத்தின் மீது ஓவர் எதிர்பார்ப்பு வந்துவிட கூடாது. அது லியோ படத்துக்கு வந்ததை போல நெகட்டிவ் விமர்சனமாகி விடும் என்பதால் படக்குழு அப்டேட்களை அதிகளவில் விடாமல் வைத்து இருக்கின்றனர். இதனால் ரசிகர்கள் கோட் படத்தின் சிங்கிளுக்கு காத்திருக்கின்றனர்.

பொதுவாக விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படத்தின் முதல் சிங்கிள் அதிக அளவில் வரவேற்பை பெறும். அந்த வகையில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் கோட் படத்தின் முதல் சிங்கிள் மாஸ் பாடலாக தான் அமைந்து இருக்கும் எனவும் கிசுகிடுக்கப்படுகிறது.

இப்படத்தில் எமோஷனல் பாடல் ஒன்றை கங்கை அமரன் எழுதி இருக்கிறார். மேலும் காதல் பாடல்களை மதன் கார்க்கி மற்றும் கபிலன் எழுதி உள்ளனராம். ராப் சிங்கர் அறிவு ஒரு பாடலை எழுதி இருப்பதாகவும் கூறப்படுகிறது. மியூசிக் வேலைகள் தொடங்கி விட்ட நிலையில் இப்படத்தில் விஜய் ஒரு பாடலை பாட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
 

Leave a Reply