• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் சட்டத்தரணி ஒருவருக்கு விதிக்கப்பட்ட தடை

கனடா

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் பெண் சட்டத்தரணி ஒருவருக்கு இரண்டாவது தடவையாகவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி ஹொங் கோவ் என்ற பெண் சட்டத்தரணிக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மோசடி செயல்களில் ஈடுபட்டதாகவும் நிதி கையாடல்களில் ஈடுபட்டதாகவும் சட்டத்தரணி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தொழில் நியதிகளுக்கு புறம்பான வகையில் சட்டத்தரணி செயற்பட்டுள்ளதாக தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

இதன்படி, ஹொங் கோவ், இனி சட்டத்தரணியாக செயற்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 45500 டொலர்கள் செலுத்த வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி கோவ் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒழுக்க விதி மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. 
 

Leave a Reply