• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவிலிருந்து நாடு திரும்பிய பெண் கைது

கனடா

கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 65 இலட்சம் ரூபாவை மோசடி செய்து 8 வருடங்களுக்கு மேலாக கனடாவில் தலைமறைவாக இருந்த நிலையில் மீண்டும் நாட்டிற்கு திரும்பிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் 2016 ஆம் ஆண்டு பாணந்துறை பிரதேசத்தில் அலுவலகம் ஒன்றை நடத்தி அதே பகுதியில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவருடன் (தற்போது உயிரிழந்துவிட்டார்) இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களின் மோசடியில் சிக்கிய வத்தளை, பாணந்துறை, கொழும்பு, மாத்தறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் வெளிநாடு செல்லவதற்காக 12,13,15, 25 இலட்சம் ரூபாவை வழங்கியதாக பாணந்துறை பிரிவின் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த நான்கு முறைப்பாடுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதே வருடத்தின் பிற்பகுதியில் கனடாவுக்கு தப்பிச் சென்ற சந்தேகநபர், இம்மாதம் 13ஆம் திகதி இலங்கைக்கு திரும்பியுள்ளதாக கிடைத்த தகவலின் பிரகாரம், மாலம்பே பகுதியில் வைத்து எஃபே (27) என்பவரை இரவு வேளையில் கைது செய்ய முடிந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக பயணத்தடையும் பெறப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சந்தேக நபர் இவ்வாறு வேலை வழங்குவதாகக் கூறி வேறு நபர்களிடம் பணம் மோசடி செய்தாரா என்பதை அறிய நாட்டிலுள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் தகவல் வழங்கப்பட்டதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 

Leave a Reply