• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாடர்ன் உடையில் பிக்பாஸ் ரக்சிதா - வியப்பில் ரசிகர்கள்

சினிமா

நடிகை ரச்சிதா மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.

கன்னட சீரியல் நடிகையான ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, பிரபல டிவியில் ஒளிபரப்பான 'பிரிவோம் சந்திப்போம்' என்கிற தொடர் மூலம் தமிழில் அறிமுகமானார்.

பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் ரக்ஷிதா. பல தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற தொடரில் ஜோடியாக நடித்த தினேஷை ரக்ஷ்தா காதலித்து கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற ரக்ஷிதாவை வனிதாவின் முன்னாள் கணவரான ராபர்ட் மாஸ்டர் ஒருதலையாக காதலித்து வந்தார்.

ஆனால் பிக் பாஸிலிருந்து வெளியேறிய பின்பு அவரவர் வேலையை பார்த்து வருகின்றனர். ஆனால் ரச்சிதா தனது கணவர் தினேஷ் குறித்து எந்தவொரு வார்த்தையும் அங்கு பேசவில்லை.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ள மகாலட்சுமி அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார்.

தற்போதும் மாடர்ன் உடையில் அசத்தலான லுக்கில் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் வாயடைத்துப் போயுள்ளனர்.
 

Leave a Reply