• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திரைப்படங்களில் பாடல்கள் உருவாவது இரண்டு வகை. 

சினிமா

திரைப்படங்களில் பாடல்கள் உருவாவது இரண்டு வகை. படத்தில் எந்த சூழ்நிலையில் பாடல் வருகிறது என்பதை இயக்குனர் இசையமைப்பாளரிடம் சொல்வார். அதுக்கேற்ப இசையமைப்பாளர் டியூன் போடுவார். இயக்குனருக்கு பிடிக்கவில்லை எனில் இசையமைப்பாளர் வேறு டியூன் போடுவார். அதில் ஒன்றை இயக்குனர் தேர்வு செய்வார். இது ஒருவகை.

மற்றொன்று, ஏற்கனவே வெளியாகி ஹிட் அடித்த சில பாடல்களை சொல்லி அது போல தனக்கு ஒரு பாடல் வேண்டும் என இயக்குனர் கேட்பார். அது மற்ற மொழி பாடலாக கூட இருக்கும். அப்படி, இளையராஜா பீக்கில் இருந்தபோது பல ஹிந்தி பாடல்களை சொல்லி அவரிடம் பாடல்களை கேட்பார்கள். அதேபோல், இளையராஜா ஏற்கனவே இசையமைத்த சில பாடல்களை சொல்லி அது போல பாடல் வேண்டும் எனக் கேட்பார்கள்.

சில இயக்குனர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி பாடல்களை சொல்லி அதுபோல பாடல் வேண்டும் என கேட்பார்கள். இளையராஜா அப்படி பல பாடல்களை இசையமைத்திருக்கிறார். ஆனால், அந்த பாடலை கேட்டால் நமக்கு வேறு எந்த பாட்டும் நினைவுக்கே வராது. அது இசையை நன்றாக தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும்.

இதை இளையராஜாவே பல மேடைகளிலும், பேட்டிகளிலும் சொல்லி இருக்கிறார். கமல்ஹாசன் தயாரித்து, கதை, திரைக்கதை எழுதி நடித்த திரைப்படம் அபூர்வ சகோதரர்கள். இந்த படத்தில் கமல்ஹாசன் குள்ள அப்புவாக ஒரு வேடத்தில் நடித்திருப்பார். அவர் விரும்பும் ரோகிணி தன்னை விரும்புவதாக நினைத்து பாடும் பாடல்தான் ‘புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா’ பாடலாகும்.

இந்த பாடல் பற்றி ஒரு மேடையில் பேசிய இளையராஜா ‘எம்.ஜி.ஆர் நடித்த அன்பே வா படத்தில் இடம் பெற்ற ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்’ பாடல் போலவே இந்த பாடல் வேண்டும் என கமல் கேட்டார். அதை கொஞ்சம் மாற்றி வேறு மாதிரி மெட்டசைத்து அந்த பாடலை உருவாக்கினேன்’ என ராஜா சொல்லி இருந்தார்.

இதுபோல பல படங்களில் இயக்குனர்கள் கேட்டபடி தான் பாடல்களை போட்டு போட்டு கொடுத்திருக்கிறேன் என இளையராஜா தெரிவித்தார்.

Leave a Reply