• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எதிர்வரும் நாட்களில் நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

இலங்கை

நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் மற்றும் அரசியலமைப்பையும் சபாநாயகர் மீறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று கொழும்பில் கையெழுத்திடப்பட்டது.

இதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன இணைய பாதுகாப்பு சட்டம் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகளை புறக்கணித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் நம்பிக்கையினையும் நாட்டின் அரசியலமைப்பை சபாநாயகர் மீறியுள்ளார்.

சபாநாயகர் தலைமையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு, அவர் கையெழுத்திட்டு, உயர் நீதிமன்றத்தின் உயர் சட்டத்தையும் மீறி சட்ட விரோதமான முறையில் இதை இன்று நாட்டின் சட்டமாக அறிவித்துள்ளனர்.

இதன் மூலம் சபாநாயகர் அரசியலமைப்புச் சட்டத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளையும் மீறியுள்ளார்.

எனவே சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.

நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் மற்றும் அரசியலமைப்பையும் சபாநாயகர் மீறியுள்ளார்.

சபாநாயகர் அலுவலகத்தின் சுதந்திரம் மற்றும் கௌரவத்தை மஹிந்த யாப்பா அபேவர்தன இழிவுபடுத்தியுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் நம்பிக்கையில்லா பிரேணையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளோம்” என சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply