• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஸ்கூல் பக்கத்தில் தியேட்டர் - ஒற்றைப் பதிலால் எம்.ஜி.ஆர் மனதை மாற்றிய நாகேஷ்

சினிமா

எம்.ஜி.ஆர் படங்களில் தொடர்ந்து வாய்ப்பினை பெற்று காமெடியில் கலக்கிய நாகேஷ், எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்த நடிகர்கள் முக்கியமானவர்.

தனது காமெடியால் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டி நடிகர் நகேஷ் ஒரு சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ள நிலையில் சென்னையில் ஒரு தியேட்டர் கட்டியதும் அந்த தியேட்டருக்கு விதிக்கப்பட்ட தடையை எம்.ஜி.ஆர் நீக்கியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

தமிழ் சினிமாவில் தனது காமெடி மற்றும் உடல்மொழியின் மூலம் மக்களை சிரிக்க வைத்த கலைஞர்களில் முக்கியமானவர் நாகேஷ். பல கட்ட போராட்டத்திற்கு பின் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்ற நாகேஷ், எம்.ஜி.ஆர், சிவாஜி மட்டுமல்லாமல், ஜெய்சங்கர், முத்துராமன், ஜெமினி கணேசன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

அதேபோல் எம்.ஜி.ஆர் படங்களில் தொடர்ந்து வாய்ப்பினை பெற்று காமெடியில் கலக்கிய நாகேஷ், எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்த நடிகர்கள் முக்கியமானவர். எம்.ஜி.ஆர் தான் சினிமாவில் இருந்து விலகும் வரை நாகேஷ்க்கு தனது படங்களில் வாய்ப்பு கொடுத்திருந்தார். அதன்பிறகு எம்.ஜி.ஆர் அரசியலில் கால்பதித்து தமிழகத்தின் முதல்வர் என்ற அரியனையில் அமர்ந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

அந்த நேரத்தில் சென்னை தி.நகரில் நடிகர் நாகேஷ் தியேட்டர் ஒன்றை கட்டியுள்ளார். இந்த தியேட்டர் பள்ளிக்கு அருகில் இருக்கிறது என்பதால், இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் நாகேஷை தோட்டத்திற்கு அழைத்துள்ளார். எம.ஜி.ஆர் அழைப்பை ஏற்று அங்கு சென்ற நாகேஷிடம், நீ ஒரு தியேட்டர் கட்டிக்கிட்டு இருக்கியாமே, அதுவுமு் ஸ்கூல் பக்கத்தில் இருக்கிறதாமே, இதனால் ஸ்கூல் பிள்ளைகள் பாதிக்கப்படமாட்டார்களாக என்று கேட்டுள்ளார்.

இதை கேட்ட நாகேஷ் ஸ்கூலுக்கு போகாமல் தியேட்டருக்கு போகும் பிள்ளைகள் நிச்சயமாக ஸ்கூலுக்கு அருகில் இருக்கும் தியேட்டருக்கு வரமாட்டார்கள் என்று கூறியுள்ளார். நாகேஷ் கூறிய எதார்த்தத்தை புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர் அந்த தியேட்டரை மீண்டும் திறக்க வழி செய்துள்ளார்.
 

Leave a Reply