• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கண்ணதாசனை கவுரவித்த எம்.ஜி.ஆர் - முன்னதாகவே வாலி கொடுத்த ரியாக்ஷன்

சினிமா

எம்.ஜி.ஆருடன் மோதல் இருந்தாலும் அவ்வப்போது எம்.ஜி.ஆர் படங்களுக்கு கண்ணதாசன் பாடல்கள் எழுதி வந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மனிதனின் உணர்ச்சிகளை பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய கண்ணதாசன் ஒரு கட்டத்தில் அரசவை கவிஞரான ஆனபோது கவிஞர் வாலி கொடுத்த ரியாக்ஷன் பலரும் அறியாத ஒரு தகவல்.

மனிதன் தன் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள் சந்தோஷங்கள் என அத்தனை உணர்ச்சிகளுக்கும் தனது பாடல்கள் மூலம் ஆறுதல் சொன்ன கவிஞர் தான் கண்ணதாசன். எம்.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி, ரஜினிகாந்த் வரை பல நடிகர்களுக்கு தனது பாடல்கள் மூலம் பெரிய வெற்றியை கொடுத்த கண்ணதாசன், சிவாஜி நடித்த ஒரு படத்திற்காக எழுதிய பாடல் பின்னாலி அவருக்கே பலித்தது என்று சொல்லலாம்.

அதேபோல் சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்திருந்தாலும், அரசியல் ரீதியாக எம்.ஜி.ஆர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்தவர் தான் கண்ணதாசன். இதன் காரணமாக இருவருக்கும் இடையே மோதல் இருந்தாலும், தொடர்ந்து எம்.ஜி.ஆர் படங்களுக்கு கண்ணதாசன் பாடல்கள் எழுதி வந்தார். படத்திற்கு முழு பாடலும் எழுதவில்லை என்றாலும் ஒருசில பாடல்களை தொடர்ந்து எழுதி வந்தார்.

1967-ல் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர் சட்டமன்ற உறுப்பினராக மாறிய நிலையில், 1969-ல் முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா மறைந்தார். அடுத்த 3 வருடங்களில் 1972-ல் எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட புதிதாக கட்சி தொடங்கிவிட்டார். அதன்பிறகு அடுத்து 5 ஆண்டுகள் கழித்து 1977-ல் அதிமுக சார்பில் போட்டிவிட்டு வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர் முதல்வராக அமந்தார்.

அப்போது தன்னை பற்றி பல மேடைகளில் விமர்சனங்கள் வைத்திருந்தாலும், கண்ணதாசனை அரசவை கவிஞராக நியமித்து அசத்தியவர் தான் எம்.ஜி.ஆர். இந்த முடிவை எடுத்த எம்.ஜி.ஆர் முதல் முறையாக கவிஞர் வாலிலை அழைத்து பேசியுள்ளார். நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். அந்த கேட்டுவிட்டு உங்களுக்கு ஆச்சேபனை இருந்தால் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். இதை கேட்ட வாலி சொல்லுங்க என்று கூறியுள்ளார்.

நான் சொல்கிறேன் பிடிக்கவில்லை என்றால் வெளிப்படையாக சொல்லிவிட வேண்டும் என்று எம்.ஜி.ஆர் சொல்ல, அட என்னணே இப்படி சஸ்பென்ஸ் வைக்கிறீங்க என்று கேட்ட வாலியிடம், கண்ணதாசனை அரசவை கவிஞராக நியமிக்க இருக்கிறேன் என்று கூறியுள்ளார் எம்.ஜி.ஆர். இதை கேட்ட, கவிஞர் வாலி, கையை கொடுங்கள். எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. இதை விட சந்தோஷமானது எதுவுமே கிடையாது. எனக்கு ரொம்ப சீனியர். இன்னும் ஒன்று சொல்கிறேன். அவரது ஆயுள் வரையில், அவரே அரசவை கவிஞர் என்று ஒரு திருத்தத்துடன் நியமனம் செய்யுங்கள். எனக்கு ரொம்ப சந்தோஷம் என்று வாலி சொல்ல எம்.ஜி.ஆர் அசந்துபோய்யுள்ளார்.

வாலியின் கையை பிடித்து என்ன ஒரு பெருந்தன்மை என்று சொல்ல, ஒரு பெருந்தன்மையும் கிடையாது. கண்ணதாசன் என்னை விட பெரியவர் 6 வருடம் சீனியர். இதில் என்ன ஒரு அற்புதம் நீங்கள் நிகழ்த்தி இருக்கிறீர்கள் என்றால், கண்ணதாசன் கவியரசர் என்று பெயர். கவியரசை இப்போது அரசு கவியாக மாற்றிவிட்டீர்கள் என்று வாலி கூறியுள்ளார். இதை கேட்டு எம்.ஜி.ஆர் மிகவும் சந்தோஷமடைந்துள்ளார்.
 

Leave a Reply