• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தவறான நடவடிக்கையில் ஈடுபட்ட 5 ஆம் தர மாணவர்கள்

இலங்கை

“5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் குழுவொன்று போதை மாத்திரைகளைப் பயன்படுத்திய சம்பவம் குருநாகல் – மதுராகொட பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக” குழந்தைகள் நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

நேற்று (17) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” குருநாகல் – மதுராகொட பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலையொன்றைச் சேர்ந்த மாணவர்கள் போதை மாத்திரைகளை உட்கொண்ட நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்களில் ஒருவன், போதைக்கு அடிமையான தனது தந்தை மறைத்து வைத்திருந்த போதை மாத்திரைகளை பாடசாலைக்கு எடுத்து வந்து தனது நண்பர்களுடன் உண்கொண்டுள்ள இந்நிலையில்,  ஒவ்வாமை காரணமாக அவர்கள் குருநாகல் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டன.

பாடசாலை மாணவர்களிடையே போதைப் பொருள் பாவனையானது பாரதூரமான விளைவை ஏற்படுத்தும். எனவே எந்தவொரு மருந்துப் பொருட்களையும் பிள்ளைகளுக்கு கிடைக்காத வகையில் வீட்டில் சேமித்து வைக்காமல் இருப்பதற்கு பெற்றோர்களும் முதியவர்களும் கவனம் செலுத்த வேண்டும்” இவ்வாறு குழந்தைகள் நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா  வலியுறுத்தியுள்ளார்.
 

Leave a Reply