• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இளையராஜா செய்த வேலையில் கண்ணீர் விட்டு கதறிய பாரதிராஜா!.. அட அந்த படமா?!…

சினிமா

தமிழ் திரையுலகில் கிராமத்து மண் வாசனை மிக்க திரைப்படங்களை இயக்கியவர் பாரதிராஜா. பதினாறு வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், கடலோர கவிதைகள், முதல் மரியாதை, கிழக்கு சீமையிலே என தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்படங்களை இயக்கியவர். தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயமாக வலம் வந்தவர்.

ஸ்ரீதேவி, கார்த்திக், ராதா, பாண்டியன், ரஞ்சனி, ராதிகா, சுதாகர் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகளை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தவர். இவர் அளவுக்கு புதுமுகங்களை தனது திரைப்படங்களில் நடிக்க வைத்து வெற்றியை பார்த்தவர்கள் திரையுலகில் யாருமே இல்லை என்றும் சொல்லலாம்.

கடந்த சில வருடங்களாக திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார். பொதுவாக சிவாஜி ஹீரோ எனில் உணர்ச்சி மிகுந்த செண்டிமெண்ட் காட்சிகள் கொண்ட கதையாக இருக்கும். அதேபோல், பெரும்பாலும் தலையில் விக் வைத்துதான் சிவாஜி நடிப்பார். ஆனால், அதே சிவாஜியை விக் மற்றும் மேக்கப்பே இல்லாமல் முதல் மரியாதை படத்தில் நடிக்க வைத்தார் பாரதிராஜா.

அது என்னவோ, இந்த படம் துவங்கியதில் இருந்தே இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதையில் இளையராஜாவுக்கு திருப்தி இல்லையாம். படத்தை முடித்து முழு படத்தையும் பார்த்த போது சில மாற்றங்களை இளையராஜா சொல்லி இருக்கிறார். ஆனால், பாரதிராஜா அதை செய்யவில்லை.

ஆனாலும், இப்படத்திற்கு மிகச்சிறந்த பாடல்களையும், பின்னணி இசையையும் கொடுத்தார் இளையராஜா. பொதுவாக அப்போதைய திரைப்படங்களின் இறுதிக்காட்சிகளில் ஒன்று சண்டை காட்சி இருக்கும். அல்லது பக்கம் பக்கமாக வசனம் இருக்கும். ஆனால், முதல் மரியாதை படத்தில் நீளமான இறுதி காட்சி வசனம் எதுவும் இல்லாமல் இருக்கும். சிவாஜியையும், ராதாவையும் வைத்து உணர்ச்சி பூர்வமாக அதை எடுத்திருப்பார் பாரதிராஜா.

அந்த காட்சிக்கு இளையராஜா அமைத்த பின்னணி இசையை பார்த்துவிட்டு கண்ணில் நீர் வழிய அவரை கட்டியணைத்து கொண்டாராம் பாரதிராஜா. அதேபோல், இது எனக்கு பிடிக்காத படம். அதனால் சம்பளமே வேண்டாம் எனவும் பாரதிராஜாவிடம் இளையராஜா சொல்லிவிட்டார். ஆனால், இந்த படத்தின் பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி, படத்தை பிடிக்காதவர் போட்ட இசை போலவே இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழச்சி கயல்விழி

Leave a Reply