• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திரிசூலம் 

சினிமா

திரிசூலம் ஜனவரி 27, 1979
தயாரித்தவர், விநியோகித்தவர், திரையிட்டவர் என மூன்று தரப்பினருக்கும் ஒரு படம் லாபத்தை தந்தால் அது வெற்றிப் படம். லாபத்தின் அளவை வைத்து வெற்றி, சூப்பர் ஹிட், பம்பர் ஹிட், ப்ளாக் பஸ்டர்  என்று மகுடம் சூட்டப்படும்
ஒரு படம் அதுவரை அந்த மொழியில் வெளிவந்த அனைத்துப் படங்களின் வசூலையும் முறியடித்தால் அது இன்டஸ்ட்ரிஹிட்.
எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் ஒரு இன்டஸ்ட்ரி ஹிட். அதற்கு முன் வெளியான அனைத்துத் தமிழ்ப் படங்களின் வசூலையும் முறியடித்தது. சாதனை என்பதே உடைப்பதற்குத்தானே.
1979 வெளியான சிவாஜியின் திரிசூலும் படம் உலகம் சுற்றும் வாலிபனின் வசூல் சாதனையை முறியடித்து இன்டஸ்ட்ரி ஹிட் என்ற மகுடத்தை சூட்டிக் கொண்டது. இந்தப் படம் உருவானதற்குப் பின்னால் சில சுவாரஸியமான சம்பவங்கள் உண்டு.
சிவாஜியின் தெய்வமகன் திரைப்படம் தமிழில் வெற்றி பெற்றதோடு, 42 வது ஆஸ்கர் விருதுக்கு, சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவில் இந்தியா சார்பில் அனுப்பப்பட்டது. சிவாஜியின் மூன்று வித்தியாசமான வேடங்கள் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தன.
இந்தப் படத்தின் பாதிப்பில் கன்னட சினிமாவின் கதாசிரியரும், பாடலாசிரியருமான உதயசங்கர் எழுதிய கதையை சங்கர் குரு என்ற பெயரில் கன்னடத்தில் எடுத்தனர். சோமசேகர் இயக்கிய இந்தப் படத்தில் ராஜ்குமார் மூன்று வேடங்களில் நடித்தார். அவரது மனைவி பர்வதம்மா படத்தை தயாரித்தார். அவர் தயாரித்த முதல் படம் இதுவாகும்.
படம் கன்னடத்தில் சக்கைப்போடு போட்டது. மூன்று வித்தியாசமான வேடங்கள் என்றால் சிவாஜிக்கு கேட்கவா வேண்டும். சங்கர் குருவின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கிய சிவாஜி தனது சிவாஜி பிலிம்ஸ் சார்பில் ரீமேக் செய்ய முடிவு செய்து, இயக்குநர் பி.மாதவனுக்கு 5000 ரூபாய் முன்பணமும் கொடுத்தார்.
சொந்தப்பட வேலை இருப்பதாகச் சொல்லி முன்பணத்தை பி.மாதவன் திருப்பிக் கொடுக்க, படம் இயக்கும் வாய்ப்பு கே.விஜயனுக்கு சென்றது. அந்தப் படம்தான் திரிசூலம்.
மூன்று சிவாஜி
ஒரு சிவாஜி உணர்ச்சி பிழம்பு.
ஒரு சிவாஜி மென்மையான CID
ஒரு சிவாஜி ஆர்ப்பாட்டமான காதலன்
படத்தில் மெகா ஹிட்டுக்கான அத்தனை அம்சங்களும்  பொங்கி வழிந்தது.
1979 திரைக்கு வந்த திரிசூலம் திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூல் மழை பொழிந்தது. ஒரு திரையரங்கில் 200 நாள்களும், 7 திரையரங்குகளில் வெள்ளிவிழாவும் கண்டது. அதன் வசூல் விவரம்…
மதுரை சிந்தாமணி - 200 நாள்கள் - 10.28 லட்சங்கள்
சென்னை சாந்தி - 175 நாள்கள் - 16.13 லட்சங்கள்
சென்னை கிரௌன் - 175 நாள்கள் - 8.59 லட்சங்கள்
சென்னை புவனேஸ்வரி - 175 நாள்கள் - 8.47 லட்சங்கள்
கோவை கீதாலயா - 175 நாள்கள் - 12.38 லட்சங்கள்
சேலம் ஓரியண்டல் - 195 நாள்கள் - 6.73 லட்சங்கள்
திருச்சி பிரபாத் - 175 நாள்கள் - 8.39 லட்சங்கள்
வேலூர் அப்ஸரா - 175 நாள்கள் - 5.92 லட்சங்கள்
தஞ்சை அருள் - 153 நாள்கள் - 4.09 லட்சங்கள்
பாண்டி ஜெயராம் - 151 நாள்கள் - 3.56 லட்சங்கள்
திருவண்ணாமலை பாலசுப்ரமணியா - 143 நாள்கள் - 3.03 லட்சங்கள்
திருப்பூர் டைமண்ட் - 142 நாள்கள் - 4.62 லட்சங்கள்
குடந்தை தேவி - 139 நாள்கள் - 2.99 லட்சங்கள்
பொள்ளாச்சி துரைஸ் - 125 நாள்கள் - 3.88 லட்சங்கள்
மாயவரம் பியர்லஸ் - 125 நாள்கள் - 2.58 லட்சங்கள்
ஈரோடு ராயல் (103 நாள்கள்) ஸ்டார் (21 நாள்கள்) - 4.59 லட்சங்கள்
நெல்லை சென்ட்ரல் - 115 நாள்கள் - 3.53 லட்சங்கள்
நாகர்கோவில் ராஜேஷ் மற்றும் யுவராஜ் (ஷிப்டிங்) - 105 நாள்கள் - 3.05 லட்சங்கள்

நியூஸ் 18 தமிழ்
 

Leave a Reply