• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காதலை வென்ற காவியம் .....

சினிமா

வசந்த மாளிகை திரைப்படத்தை பற்றி பேசாமல் இருக்க முடியாது.......
காதலை வென்ற காவியம் .....
தெய்வீக காதல் என்பார்கள். அது எப்படி தெய்வீக காதல் என்பது என்று பலர் மனதிலும் கேள்வி எழுந்த போது 1953 ஆம் வருடம் நாகேஸ்வரராவ் சாவித்திரி நடித்த வெளிவந்த தேவதாஸ் படம் அந்த கேள்விக்கு சரியான பதில் சொன்னது.
 இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அதே சாயலில் சில காதல் திரைப்படங்கள் வெளிவந்தன.
 அவற்றில் பெரும்பாலானவைகள் காணாமல் போயின.
 தேவதாசின் சாதனையை முறியடிக்க கூடிய ஒரு தெய்வீக காதல் படம் வர சுமார் 20 வருடங்கள் ஆனது...
 1972 ஆம் வருடம் வெளிவந்த வசந்த மாளிகை படம் தமிழ்நாட்டில் 205 நாட்களும் இலங்கையில் 287 நாட்கள் ஓடி மாபெரும் வசூல் சாதனை புரிந்தது..
 அது மட்டும் அல்லாமல் சிவாஜி வாணிஸ்ரீ  நடிப்பையும் ஒரு நிஜ காதலர்கள் எப்படி இருப்பார்களோ
 அதை திரையிலும் கொண்டு வந்து அசத்தியதை கண்டு பெண்கள் கூட்டம் படத்தை பார்ப்பதற்கு அலை மோதியது என்பது நிஜம்...
 நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ, நாகேஷ் ,சுந்தர் ராஜன், பண்டரிபாய், ரங்காராவ் ,வி கே ராமசாமி, புஷ்பலதா ,ராம்தாஸ் ,சி கே சரஸ்வதி, ஸ்ரீதேவி ,செந்தாமரை, காஞ்சனா
 இப்படி ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்....
 தெலுங்கு எழுத்தாளர் கௌசல்யா தேவியின் கதைக்கு அற்புதமாக தமிழில் வசனம் எழுதி இருந்தார் பாலமுருகன். பிரேம் நகர் படத்தை இயக்கிய பிரகாஷ்ராவ் அவர்களிடமே வசந்த மாளிகை படத்தையும் டைரக்ட் செய்யும் பொறுப்பை ஒப்படைத்தார்கள்....
 தயாரிப்பாளர்கள் ஜமீன் வீட்டு வாரிசான சிவாஜி தினமும் மது மாது என வாழ்க்கையை குதூகலமாக கழித்துக் கொண்டிருக்கிறார்....
 ஒருநாள் விமானத்தில் பயணம் செய்யும்போது விமான பணிப்பெண் வாணிஸ்ரீ மை சந்திக்கிறார் வசதி குறைவான குடும்பத்தில் பிறந்து இந்த வேலையில் கிடைக்கும் சம்பளத்தைக் கொண்டு குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்புள்ள இளம்பெண் வாணிஸ்ரீ.. அவரது நற்பண்புகளை அறிந்து கொள்ளும் சிவாஜி ஒரு கட்டத்தில் தன்னுடைய பர்சனல் பிஏவாக  வைத்துக் கொள்கிறார்....
குடி, ஊதஆரஇத்தனம், பெண்கள் சகவாசம் இப்படி வரிசையாக இருக்கும் தீய பழக்கங்களையும் தாண்டி சிவாஜியிடம் பல நல்ல குணங்கள் இருப்பதை கண்டுபிடித்து அவரை திருத்துகிறார் ...
ஒரு கட்டத்தில் இருவரும் மனம் விட்டு காதலிக்கிறார்கள்... ஜமீன் பரம்பரையை சேர்ந்தவர்கள் அந்தஸ்தை காரணம் காட்டி வாணிஸ்ரீயை அவமானப்படுத்துகிறார்கள் ..
இதனால் அங்கிருந்து வெளியேறி விடுகிறார் வாணிஸ்ரீ ..காதலியின் பிரிவால் வேதனைப்படும் சிவாஜி ஒரு கட்டத்தில் விஷம் குடித்து தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்கிறார்... விஷயமறிந்து ஓடிவந்து தன் காதலன் உயிரை காப்பாற்றி ஒன்று சேர்கிறார்... வாணிஸ்ரீ .....
இப்படத்தில் முதலில் கிளைமாக்ஸ் நடிகர் திலகம் இறந்து விடுவது போல படமாக்கி இருந்தார்கள்... தியேட்டரில் மக்கள் அதை விரும்பவில்லை என்று அறிந்ததும் இருவரும் ஒன்று சேர்வது போல காட்சியை மாற்றி தியேட்டர்களுக்கு பிரிண்ட் அனுப்பி வைத்தார்கள்..... படத்திற்கு கூட்டம் அலைமோதியது...
 வசந்த மாளிகை மாபெரும் வெற்றிக்கு இன்னொரு காரணம் பாடல்கள் தான் ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன், ஏன் ஏன் பாடலுக்கும், குடிமகனே பெருங்குடிமகனே பாடலுக்கும் ,
சிஐடி சகுந்தலாவுடன் சிவாஜி ஆடிய ஆட்டத்தை  பார்த்துவிட்டு திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த பெரும்பாலோர் எழுந்து ஆடினார்கள்...
 கே வி மகாதேவன் இசையில் பாடல்களை கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். இப்படத்தின் கதையும் கவிஞரின் வாழ்க்கை நடந்த சம்பவம் ஒன்றாக இருந்ததாம். அதனால் கவிஞர் படத்திற்கு மிகவும் சிறப்பாக பாடல்கள் எழுதி தந்தார் என்று அப்போது சினிமா வட்டாரத்தில் பேசிக்கொண்டார்கள்.

 அதை உறுதி செய்யும் வகையில் யாருக்காக இது யாருக்காக என்ற பாடலாகட்டும் , மயக்கம் என்ன இந்த மௌனம் என்ற பாடலும் சரி, கலைமகள் கைப்பொருளே பாடலாகட்டும் இப்படி இதில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன என்பது தான் உண்மை ....
வசந்த மாளிகை படம் எப்போதும் ஏதாவது ஒரு திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்தால் அங்கு கணிசமான கூட்டம் இருப்பதை 
பார்க்க முடிகின்றது...........
காலத்தால் அழியாத காதல் படமாக கம்பீரமாக இன்றும் நிமிர்ந்து நிற்கிறது
வசந்த மாளிகை......
உங்களுக்காக.....G.லட்சுமணன்...மதுரை

Leave a Reply