• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இணையவழிப் பாதுகாப்புச் சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல - ஐக்கிய தேசியக் கட்சி

இலங்கை

இணையவழி பாதுகாப்பு சட்டம் அரசியலமைப்பிற்கு முரணாக நிறைவேற்றப்படவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இணையவழிப் பாதுகாப்புச் சட்டம் கடந்த மாதம் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்ட போது அதற்கு உயர் நீதிமன்றத்தால் சில திருத்தங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.

அந்த திருத்தங்கள் அனைத்தும் உள்வாங்கப்பட்டே சட்ட வரைபு தயாரிக்கப்பட்டிருந்தது. குறித்த சட்டம் தயாரிக்கப்படும் போது சில தரப்பினர் திருத்தங்களை முன்வைத்திருந்தனர்.

என்றாலும் இறுதி நேரத்தில் அதனை எடுத்துக்கொள்ள முடியவில்லை.

என்றாலும் உயர் நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்டிருந்த திருத்தங்களுடன் சட்டமூலத்தை அனுமதித்துக்கொண்ட பின்னர், அமைச்சரவையில் குறித்த சட்டத்துக்கு திருத்தம் கொண்டுவந்து, நாடாளுமன்றத்தில் அதனை சமர்க்க அரசாங்கம் தீர்மானித்தது.

அதன் பிரகாரமே தற்போது சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவைக்கு சில திருத்தங்களை மேற்கொள்ள விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த அமைச்சரவையின் போது அந்த திருத்தங்களை முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

எனவே சபாநாயகர் கைச்சாத்திட்டத்தில் இருந்து இணையவழி பாதுகாப்புச் சட்டம் தற்போது நாட்டில் அமுலில் உள்ளது.

அதனால் சமூக வலைத்தளங்களை பயன்படுத்திக்கொண்டு தனிநபர்களை இலக்குவைத்து பொய்ப் பிரசாரங்கள் அவதூறான விடயங்கள் பிரசுரிக்கப்படுமாக இருந்தால், அவர்களுக்கு எதிராக குறித்த சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க முடியும்” என ஆசு மாரசிங்க மேலும் குறிப்பிட்டார்.
 

Leave a Reply