• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பென்ஸ் காரை தொட்டு பார்த்து அடி வாங்கிய மயில்சாமி!.. பிறந்தநாளில் அவருக்கு கிடைத்த சர்ப்பரைஸ்!..

சினிமா

சினிமாவில் பல கோடிகளை சம்பளமாக வாங்கும் நடிகர்கள் சொகுசு கார் வாங்குவது சுலபம். இன்னும் சொல்லப்போனால் கோடிகளில் சம்பளம் வாங்கும் பல நடிகர்களும் பல சொகுசு கார்களை வைத்திருப்பார்கள். ஒவ்வொரு காரும் பல கோடி விலை உடையதாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் பெரிய நடிகர்கள் விதவிதமாக சொகுசு கார்களை வாங்குவதை மிகவும் விரும்புவார்கள்.

இப்போதெல்லாம் ஒரு படத்தை சூப்பர் ஹிட் படமாக கொடுத்தால் உடனே இயக்குனருக்கு சொகுசு கார் கிடைத்து விடுகிறது. ஜெயிலர் படம் நல்ல லாபத்தை கொடுத்ததால் ரஜினிக்கும், அப்படத்தின் இயக்குனர் நெல்சனுக்கும் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் விலை உயர்ந்த சொகுசு காரை அவர்களுக்கு பரிசளித்தார்.

சில சமயம் நடிகர்கள் தனக்கு ஹிட் படத்தை கொடுத்த இயக்குனருக்கு கார் ஒன்றை வாங்கி தருவார்கள். மாமன்னன் சூப்பர் ஹிட் அடித்ததால் அப்பட இயக்குனர் மாரி செல்வராஜுக்கு ஒரு காரை வாங்கி கொடுத்தார். விக்ரம் பட ஹிட் அடித்ததால் லோகேஷ் கனகராஜுக்கு கமலும் ஒரு காரை வாங்கி கொடுத்தார்.

ஆனால், சின்ன சின்ன காமெடி நடிகர்களுக்கு கார் என்பது எப்போதும் ஒரு கனவுதான். படப்பிடிப்பு தளத்திற்கு கூட தயாரிப்பு நிறுவனம் அனுப்பும் காரில்தான் போக முடியும். சினிமாவில் நடித்து வரும் பல நடிகர்களுக்கும் கார் கிடையாது. எனவே, கார் வாங்குவது என்பது பல நடிகர்களின் கனவாக இருக்கும்.

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் மறைந்த நடிகர் மயில்சாமி. அதோடு, சின்ன சின்ன நடிகர்களுக்கும் பல உதவிகளை செய்து வந்தவர். இவர் ஒருமுறை ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்த பென்ஸ் காரை ஆசையாக தொட்டு பார்த்துள்ளார். அப்போது காரின் சொந்தக்காரருக்கு அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு காருக்கு சொந்தக்காரர் மயில்சாமியை அடித்துவிட்டாராம்.

ஆனால், அதே மயில்சாமிக்கு அவரின் 50வது பிறந்தாளில் அவரின் மனைவி மற்றும் உறவினர்கள் சேர்ந்து அவருக்கு ஒரு பென்ஸ் காரை பரிசாக வாங்கி கொடுத்தார்களாம். இந்த தகவலை சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கூறியிருந்தார்.
 

Leave a Reply