• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்தியாவின் UPI ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறைமை இலங்கையில் அறிமுகம்

இலங்கை

இந்தியாவின் UPI என்ற ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறைமை நாளை முதல் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணையவழி முறையின் ஊடாக கொழும்பில் இதனை அறிமுகப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

UPI என்ற ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறைமை பல வங்கிக் கணக்குகளை, ஒரே தொலைபேசி செயலி ஊடாக இணைக்கும் அமைப்பாகும் என்பதுடன், இந்த கட்டண முறையானது தொலைபேசிகள் மூலம் வங்கிகளுக்கு இடையேயான மற்றும் தனிப்பட்ட வர்த்தக பரிவர்த்தனைகளை எளிதாக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply