• Welcome to TamilsGuide
செய்திகள் 1

30 நிமிடங்கள் மட்டுமே மகன் ஹரியை பார்த்த மன்னர் சார்லஸ்

மன்னர் சார்லஸ் தனது மன அழுத்தத்தை குறைக்க மகன் ஹரியை 30 நிமிடங்கள் பார்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மன்னர் சார்லஸ், சிகிச்சையைத் தொடங்கிய மறுநாளே Clarence Houseயை விட்டு வெளியேறினார். அதனைத் தொடர்ந்து தனக்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில் அன்பான எண்ணங்கள் பாரிய ஆறுதலையும், ஊக்கத்தையும் தருகின்றன என குறிப்பிட்டார்.
  
மன அழுத்தத்தை குறைக்க 30 நிமிடங்கள் இந்த நிலையில் முன்னணி அரச நிபுணர் ஒருவர், மன்னருக்கு தேவையற்ற மன அழுத்தத்தைத் தடுக்க நீண்ட சந்திப்புகள் தவிர்க்கப்பட்டது என்று பரிந்துரைத்துள்ளார்.

எனினும், இளவரசர் ஹரியை 30 நிமிடங்கள் மன்னர் பார்த்துள்ளார். இது அவரது மன அழுத்தத்தை குறைக்கும் என நிபுணர் கூறுகிறார்.

இதனைத் தொடர்ந்து, எழுத்தாளர் மற்றும் ஒளிபரப்பாளருமான ராபர்ட் ஜாப்சன், மன்னருக்கு மிகவும் தேவைப்படுவது கொஞ்சம் அமைதியும், நிம்மதியும் தான் என்றார்.

இதற்கிடையில் மன்னர் சார்லஸ் தனது மனைவி கமீலாவுடன் இணைந்து, சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட் சேப்பலுக்கு சென்றபோது, ரெவ் கேனான் பால் வில்லியம்ஸால் வரவேற்கப்பட்டார். அவர் 100க்கும் மேற்பட்ட நலம் விரும்பிகளின் கூட்டத்தைப் பார்த்து சிரித்து கை அசைத்தார். 
 

Leave a Reply