• Welcome to TamilsGuide
செய்திகள் 1

H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. 21 வயதுக்குட்பட்ட H-1B விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் குழந்தைகள் அமெரிக்காவில் பணிபுரிய அனுமதிக்கும் முக்கிய மசோதாவுக்கு Joe Biden அரசாங்கம் விரைவில் ஒப்புதல் அளிக்கஉள்ளது.
  
இதன் மூலம், கிட்டத்தட்ட ஒரு லட்சம் H-4 Visa வைத்திருப்பவர்கள் (H-1B விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் குழந்தைகள்) தானியங்கி பணி அங்கீகாரத்தை (automatic work authorization) பெறுவார்கள்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் தேசிய பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு ஆளும் ஜனநாயக கட்சி மற்றும் எதிர்க்கட்சியான குடியரசு கட்சி தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க செனட் சபையில் இரு தரப்புக்கும் இடையே நீண்ட விவாதங்களுக்குப் பிறகு இந்த உடன்பாடு எட்டப்பட்டது.

21 வயதுக்கு மேற்பட்ட சுமார் 2.5 லட்சம் H-1B விசா வைத்திருப்பவர்களின் குழந்தைகளுக்கும் இது ஒரு தீர்வை வழங்கும்.

அமெரிக்காவில் Green Card-களுக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இந்திய தொழில் வல்லுநர்களுக்கு இது மிகவும் பயனுள்ள மசோதாவாகும்.

இந்த மசோதா அமுல்படுத்தப்பட்டால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 1,58,000 பேருக்கு கிரீன் கார்டு வழங்கப்படும்.

மேலும், சுமார் 25,000 K-1, K-2 மற்றும் K-3 புலம்பெயர்ந்தோர் அல்லாத விசா வைத்திருப்பவர்கள் (எதிர்கால வாழ்க்கைத் துணைவர்கள் அல்லது மனைவிகள் மற்றும் அமெரிக்க குடிமக்களின் குழந்தைகள்) மற்றும் 100,000 H-4 விசா வைத்திருப்பவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணைவர்கள் பணிபுரியும் பகுதிகளில் பணிபுரியும் வாய்ப்பைப் பெறுவார்கள் என வெள்ளை மாளிகை வெளிப்படுத்தியது. 
 

Leave a Reply