• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திருக்கோணமலை நகரில் கோணேசர் ஊர்வலம் நடைபெறுவது வழமையான விழாவாகும்

இலங்கை

சிவராத்திரி விழாவைத் தொடர்ந்து திருக்கோணமலை நகரில் கோணேசர் ஊர்வலம் நடைபெறுவது வழமையான விழாவாகும். கோணேசப் பெருமானை கேடகத்தில் வைத்தே ஊர்வலமாகக் கொண்டு செல்வர். இவ்வாறு கோணேசப் பெருமானை கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் கேடகம் பழுதடைந்த சூழலில், புதிய கேடகம் செய்யும் பணியை கனடாவில் உள்ள திருகோணமலை நலன்புரிச் சங்கம் மேற்கொண்டு வருகின்றது.

கமலாலயம் கலைக்கூடம் நிறுவனம் இக்கேடகம் செய்யும் பணியை பொறுப்பு எடுத்துள்ளது . கமலாலயம் கலைக்கூடத்தின் உரிமையாளர் திரு.குணபாலசிங்கம் சந்திரமோகன் கேடகம் செய்யும் பணிக்கான முற்பணமாக ஐந்து இலட்சம் உரூபாவை 2024/02/05 ஆம் நாள் ஆகிய நேற்று கனடா திருக்கோணமலை நலன்புரிச் சங்கத்தின் சார்பில் திரு.சண்முகம் குகதாசன் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். இதன் பொழுது கோணேசர் கோவில் அறங்காவல் குழுத் தலைவர் திரு.திலகரத்தினம் துஷ்யந்தன் அவர்களும் உடன் இருந்தார்.

கேடகம் அமைக்கும் பணிகள் சிவராத்திரிக்கு முன்பு நிறைவு பெறும் எனவும் இவ்வாண்டு கோணேசர் ஊர்வலம் புதிய கேடகத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply