• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மக்கள் திலகம் ஆரூர்தாஸ் அவர்களிடம் மனம் திறந்து கூறிய...உண்மை சம்பவங்கள்

சினிமா

மக்கள் திலகம் அவர்கள் திரு ஆரூர்தாஸ் ஐயா அவர்களிடம் மனம் திறந்து கூறிய...உண்மை சம்பவங்கள்.

திரு ஆரூர்தாஸ் ஐயா அவர்களுக்கு
இதயம் நிறைந்த நன்றி.
என்னை வச்சுப் படம் ஆரம்பிச்சா..
அது வளராம நின்னு போயிடும்..
ஏன்னா... எம் ஜி ஆர் கால்ஷீட்
குடுக்க மாட்டாருங்குற ஒரு வதந்தி உண்டு... அது எனக்கும் தெரியும்..
இப்போ உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்றேன்..
சில போலித் தயாரிப்பாளருங்க
என்னை வச்சு பணம் சம்பாதிக்கிறதுக்காக...
நான் நடிக்கிறதா சொல்லி..
பைனான்ஸியர் கிட்டே பணம் வாங்கி
சும்மா பேருக்கு எனக்கு ஒரு சின்ன
அட்வான்ஸைக் கொடுத்து எங்கிட்ட
அனுமதி வாங்கிக்கிட்டு பேப்பர்ல
விளம்பரம் கொடுப்பாங்க..
பூஜை போட்டு ஒரு நாள் ரெண்டு நாள்
படப்பிடிப்பு நடத்துவாங்க..
அதைப் பார்த்து ஏமாந்து ஒரு சில விநியோகஸ்தருங்க ஏரியாக்கள் பேருல முன் பணம் கொடுப்பாங்க
அவ்வளவுதான் அந்த அட்வான்ஸ் பணத்தை வாங்கிட்டதோட சரி 
அதுக்கப்புறம் எனக்கோ
மத்த நடிகருங்க கலைஞர்களுக்கோ
சம்பளம் கொடுக்காம சாக்கு போக்கு சொல்லுவாங்க..
அதோட கூட எம் ஜி ஆர் கால்ஷீட்
கொடுக்க மாட்டேங்குறாரு..
அதனால சூட்டிங் நடத்த முடியலேன்னு சொல்லி..
மொத்தப் பழியையும் என் மேல போட்டுட்டு தப்பிச்சுக்குவாங்க..
அப்படிப்பட்டவங்கன்னு தெரிஞ்சு
அவங்க மாதிரி ஆளுங்களைத்
தவிர்க்கிறதுக்காகத்தான்..
என் ஒப்பந்தப் பத்திரத்துல
கடுமையான நிபந்தனைகளை விதிப்பேன்..
அந்தக் கடுப்புலதான் என்னைப்பத்தின தவறான வதந்தியை அவங்க பரப்புவாங்க 
சின்னப்பா தேவர் அண்ணனைக்
கேட்டுப் பாருங்க...
கோயம்புத்தூர் ஜூபிடர் பிக்சர்ஸ்ல
நான் மாத சம்பள நடிகரா இருந்த காலத்துல குடும்பம் நடத்த முடியாம
எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கேன்னு
அவருக்குத் தெரியும்..

உள்ளூர்காரர்ங்கிறதுனால அவருதான் அப்பப்போ எனக்கு எவ்வளவோ உதவிகள் செய்திருக்காரு..
அப்படிப்பட்ட கஷ்டகாலத்துல எல்லாம் எந்தப் படத் தயாரிப்பாளருங்க எனக்கு என்ன
உதவி செய்திருக்காங்க...
ஒருத்தருமே ஒண்ணுமே செய்யலே
1947,ல நான் ஹீரோவா நடிச்சு
ஏ எஸ் ஏ சாமி அண்ணன்..
முதன் முதலா டைரக்ட் பண்ணி வெளிவந்து வெற்றியடைஞ்ச ராஜகுமாரி படத்துலே என்னை ஹீரோவா போடுறதுக்கு தயாரிப்பாளருங்க தயங்குனாங்க
ராமச்சந்திரன் தான் என் படத்துக்கு ஹீரோன்னு சாமி அண்ணன் 
அடிச்சு சொல்லிட்டாரு..
தயாரிப்பாளர்கள் தயங்குனதுல
ஒரு காரணமும் இருந்தது
அது என்னன்னா..
அந்தப் படத்துக்கு முன்னால
நான் ஹீரோவாகவும் டி வி குமுதினி
ஹீரோயினாகவும் நடிச்சுத் தொடங்க
இருந்த சாயா ங்குற படம் விளம்பரத்தோட நின்னு போயிடுச்சு
வேற ஏதேதோ காரணத்தினால அந்தப்படத்தை தயாரிப்பாளருங்க
கைவிட்டுட்டாங்க..
எனக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்
கடைசில பழியை எம்மேல சுமத்துனாங்க..
ராமச்சந்திரன் ராசி இல்லாதவன்
அதனாலதான் படம் நின்னு போயிடுச்சின்னு சொல்லி..
எம்மேலயே எனக்கே ஒரு அவநம்பிக்கை உண்டாகும்படி
பண்ணி என்னைக் கோழையாக்கிட்டாங்க..
அப்போ அவங்களால எனக்கு ஏற்பட்ட
அவச்சொல் அவமானம் துன்பம் எதையுமே நான் மறக்கலே
இன்னிக்கும் அதெல்லாம் என் ஞாபகத்துல இருக்கு..
இப்போ எங்கே போச்சு அந்த ராசி
எத்தனையோ நடிகருங்க வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டப்
பட்டிருக்காங்கன்னு எனக்குத் தெரியும் ஆனா அவங்கள்ள யாருமே
என்னைப்போல அவமானமும் துன்பமும் பட்டிருக்க மாட்டாங்க
எனக்கும் ஒரு நல்ல காலம் வரும்
நானும் சிறந்த நடிகனா வருவேன்
எம் கே தியாகராஜ பாகவதர்
பி யு சின்னப்பா அண்ணன் மாதிரி
எனக்கும் புகழ் கிடைக்கும்..
நானும் ஒரு படத்தயாரிப்பாளர் ஆவேன் என் படத்தை நானே
டைரக்ட் பண்ணுவேன்
வெற்றி அடைஞ்சு காட்டுவேன் கிற
நம்பிக்கை அப்பவே எனக்கு இருந்தது..
எங்கம்மாவும் இதையேதான் அடிக்கடி
சொல்லிச் சொல்லி எனக்கு தைரியம்
கொடுப்பாங்க..
அன்னிக்கு என் தாய் கொடுத்த
தைரியத்தோடதான்
அவங்களைத் துணையாகக் கொண்டு நான் வாழ்ந்துக்கிட்டு
இருக்கேன் இன்னிக்கி வரைக்கும் ....
--
Poundoss Perumal

 

Leave a Reply