• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை....    

சினிமா

A.R. ரஹ்மானுடைய இசையில் ரொம்ப ரொம்ப பிடிச்ச ஆல்டைம் ஃபேவரிட் பாடல் எதுன்னு கேட்டா “கண்ணாளனே எனது கண்ணை” பாட்டை தான் சொல்லுவேன்... அவ்வளவு இஷ்டம் அந்த பாட்டு மேல்... 

குமுசும குமுசும கும்குச்சக்... பெண் கோரஸ் குரலில் ஆரம்பிக்கும் போது ஒரு வித சிலிர்ப்பு வந்து போகும். “மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுள வச்சுக்க” வரிகளை தொடர்ந்து கண்ணாளனே எனது கண்ணை” அப்படி சித்ராமா ஆரம்பிக்க... மயிர் கூச்செறியும் அப்படீங்கிற ஒரு சம்பவம் நமது உடலில் ஏற்பட்டு எகத்தாளமாக பீறிட்டு கொள்ளும் நிகழ்வு அறங்கேறி விட்டு செல்வது தவிர்க்க முடியாததாகி விடும்.... “வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ” வரிகளை தொடர்ந்து “டும் டக்க டக்க டும்” இரட்டை தபெலாக்களின் ஸ்பரிச உணர்வை கடக்க முடியாமல் தவிக்கும் போதே....

கமபமமா...கூடவே “ஆ..ஆ..ஆ..” கவுண்டர் பாயிண்ட்டாக அதே குரல் கூடவே தொடர... கமபத நீ..... சனிபத சனிபத னிச..கூட திரும்ப குட்டி கவுண்டர் பாயிண்ட்டா “ம த..” திடீர்னு மென்மையான மயிலிரகால் வருடும் சுகந்தமான பாடலின் போக்கு சிற்சில வினாடிகள் ஹிந்துஸ்தானி இசையின் இன்பத்தை அனுபவித்து வந்து விடும்...

“உந்தன் கண் ஜாடை விழுந்ததில் நெஞ்சம்” சரணம் முதல் வரி ஆரம்பிக்கும் போது திரும்ப மனசு அந்த மயிலிறகு சம்பவத்துக்குள் வந்து ஆட்பட்டு கொண்டு விடும்... முதல் சரணம் முழுதும் சித்ராமாவின் அந்த குரலின் மேன்மைக்கு துணையாக தபேலாவே பாதுகாவலாக வந்து கொண்டிருக்கும். 

மூங்கில் காட்டில் தீ விழும் பொழுது வரிகளை தொடர்ந்து “மூங்கில் காடென்று மாறினள் மாது” என பெண்ணின் உச்ச பட்ட ஸ்பரிச தவிப்பை சித்ராமாவின் டைனமிக்கால் டரியல் செய்திருப்பார் ரஹ்மான்...

பார்த்தாலே பரவசம் படத்திற்காக டூயட் பாடலுக்கு ஒரு ட்யூன் அமைக்கப் பட்டு ஒரு கேசட்டில் பதிவு செய்து அதற்கு பாடல் எழுத வாலிப கவிஞரின் வீட்டிற்கு அதன் தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி கொண்டு சென்று கொடுக்க, அதை கேட்டுவிட்டு “இந்த டியூனுக்கெல்லாம் என்னால டூயட் பாடல் எழுத வரல, வேற டியூன் போட்டு கொடுக்க ரஹ்மான்கிட்ட நான் சொன்னேன்னு சொல்லீடுங்க” என திருப்பி அனுப்பி விட்டார். விஷயம் ரஹ்மான் காதுக்கு செல்ல அன்று இரவு 4,5 டியூன்கள் போட்டு அதை அவரே வாலியின் வீட்டுக்கு கொண்டு சென்று அவரை கேட்க வைத்து அதில் செலக்ட் செய்த டியூனுக்கு பாடல் எழுதி அமைந்தது தான் அந்த படத்தில் வரும் “அட மூன்றெழுத்து கெட்ட வார்த்தை அந்த வார்த்தை” பாடல். அவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும் மூத்த கலைஞர்கள் மேல் கொண்ட மரியாதையை காட்டும் சம்பவமானது இந்த நிகழ்வு.

இது போல அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி, என் மேல் விழுந்த மழைத் துளியே, உதயா உதயா உளறுகிறேன், காதல் கடிதம் தீட்டவே, வெள்ளி மலரே வெள்ளி மலரே, நிலா காய்கிறது நேரம், மலர்களே மலர்களே இது என்ன, கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா, பூங்காற்றிலே உன் சுவாசத்தை, ஒரு தெய்வம் தந்த பூவே, மார்கழி திங்கள் அல்லவா மதி, குறுக்கு சிருத்தவளே என்னை குங்குமத்தில்.... அன்றிலிருந்து இன்று வரை இது போல பாடல்கள் ஒவ்வொரு இசை ரசிகனின் செவி வழியே இதயத்தை வருடி கொண்டே இருக்கும் என்றால் அது மிகையாகாது.

Kannan Natarajan

Leave a Reply