• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புடவை கட்டுவதற்கே இலக்கணம் வகுத்துக் கொடுத்த வசந்தமாளிகையின் நாயகி வாணி ஸ்ரீ... 

சினிமா

எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்துத் திரைப்படங்களில் சரோஜா தேவி, சாவித்திரி, பத்மினி, கே.ஆர்.விஜயா என ஹீரோயின்கள் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த காலம் அது. இவர்களின் வரிசையில் துணை நடிகையாக தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்து ஹீரோயினாக உயர்ந்தவர் வாணி ஸ்ரீ. 

இன்றும் ஜவுளிக் கடைகளில் உள்ள சேலைகட்டியிருக்கும் பொம்மைகளைப் பாருங்கள். அதில் வாணி ஸ்ரீ-யின் ஸ்டைல் தெரியும். ஒவ்வொரு மங்கையரின் சேலை கட்டும் அழகிற்கு வாணி ஸ்ரீ ஸ்டைல் தான் அடையாளமே. அந்த அளவிற்கு தனித்துவமாக சேலை கட்டி ரசிகர்களைக் கிறங்கடித்தவர். அதிலும் குறிப்பாக வசந்த மாளிகை படத்தில் இவர் அணிந்து வரும் காஸ்ட்டீயூம்கள் காண்போர் மனதைக் கொள்ளை கொள்ளும் அழகு. 

டீச்சரம்மா படத்தில் விஜயகுமாரியுடன் துணை நடிகையாக வந்தவர்..உயர்ந்த மனிதனில் சிவாஜியுடன் கதாநாயகி அந்தஸ்துக்கு உயர்ந்தவர். இதுவரை .தமிழ்ப் பட நாயகி என்றாலே பூ வைத்த .நீண்ட ஜடை..,அம்சமான முகம்..என்ற நகைகள் அணிந்து நல்ல பட்டுப்புடவை ஒத்த புடவைக்கட்டு என்ற நிலையை சற்று மாற்றி ஜடை பெரும்பாலும் தவிர்த்து எளிமையான, மெலிதான நகை, உடை அலங்காரம், என்று அந்த வட்டத்தில் கல்லூரி மாணவியரை ஈடுபடுத்தியவர்.

ஏனோ தமிழ்ப் படத்திற்கு அன்று விளம்பரம் இல்லாததாலோ என்னவோ ..ஹிந்தியில் சீதா அவுர் கீதா என்ற படம் இந்த இரட்டைக் கதாப்பாத்திரம் தழுவி எடுக்கப் பட்டு...நீண்டநாள் கழித்து தமிழில் அதுவே மறு பதிவாக வாணி ராணி என்று ..வாணிஸ்ரீ யே நாயகியாக நடித்தார். இருளும் ஒளியும் படத்தில்.. வானிலே மண்ணிலே ...நேரிலே...என்று இயற்கையை வியந்து பாடி ஆடி மகிழ்பவரும், வீட்டில் அடக்கமாய் நல்ல அலங்காரத்துடன் திருமகள் தேடி வந்தாள்.. என்று பாடி நம்மை மகிழ்வித்தாரும் இவரே. வசந்தமாளிகையில் ... மயக்கமென ... இந்த மௌனமென்ன.. பாடலில் நல்ல நடிப்பினைத் தந்து தமிழ் ரசிகர் மனங்களை வென்றவர்.

இந்தியில் பெரும் வெற்றி பெற்ற. ஆராதனா படத்தை 1973ல் மொழி மாற்றம் செய்யப் பலரும் தயங்கிய வேளையில் சிவாஜி, வாணிஶ்ரீ ஜோடியாக நடிக்க சிவகாமியின் செல்வன் படம் தயாரானது. 

சிவாஜி ஏற்றுக்கொண்ட ஒரே தலைவர் காமராஜர். அதனால், 'ஆராதனா' படத்தைத் தமிழில் எடுத்த போது 'சிவகாமியின் செல்வன்' என்றே படத்துக்குப் பெயரிட்டார் . காமராஜர் அம்மாவின் பெயர் சிவகாமி. பாடல்களுக்காகவே ஓடிய படம் என்பதால், எம்.எஸ்.விஸ்வநாதன் சிறப்புக் கவனம் எடுத்து இசை அமைத்த படம்.

படத்தின் நாயகி வாணிஶ்ரீ ஒரு பேட்டியில் சிவாஜியை மிகவும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார். வசந்தமாளிகை ஏற்கெனவே எங்களுக்கு மிகப்பெரிய வெற்றிப் படம். அதைப்போலவே எனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரம். சிவாஜி அவர்கள் என்னைப்பார்க்கும் பொழுதெல்லாம் நான் புடவை அணியும் அழகை எந்த வித சுருக்கமோ தொய்வோ இல்லாமல் உடுத்தும் அழகை எனது காஸ்ட்யூம் சென்ஸையும் ரொம்பவே பாராட்டுவார். என்றார்.

மேலும் சிவாஜி கணேசனும், லதாவும் இணைந்து நடித்த நடித்த ஒரே படமும் இதுவே.

Thiyaghu Ktr

Leave a Reply