• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்.ஜி.ஆருக்கு தம்பியாக நடிக்க வந்த வாய்ப்பு!.. மிஸ் ஆயிடுச்சேன்னு இப்ப வரைக்கும் ஃபீல் பண்ணும் கமல்!..

சினிமா

ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா படத்தில் 5 வயது சிறுவனாக நடிக்க துவங்கியவர்தான் கமல்ஹாசன். அந்த படத்தில் ஜெமினி கணேசன், சாவித்ரி ஜோடிக்கு மகனாக நடித்திருந்தார். அதன்பின் சிவாஜியுடன் பார்த்தால் பசி தீரும், எம்.ஜி.ஆருடன் ஆனந்த ஜோதி என தொடர்ந்து சில படங்களில் நடித்தார்.

9 வயது வரை சிறுவனாக நடித்த கமல் அதன்பின் அப்படி நடிக்க முடியவில்லை. அதன்பின் தங்கப்பன் எனும் நடன இயக்குனரிடம் உதவியாளராக சேர்ந்து சில படங்களில் வேலை செய்தார். டீன் ஏஜை எட்டியபின் சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார்.

அப்போதுதான் அவருக்கு இயக்குனர் ஆர்.சி.சக்தியுடன் பழக்கம் ஏற்பட்டது. அதன் காரணமாக சக்தி இயக்கிய ‘உணர்ச்சிகள்’ படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதாவது 22 வயதிலேயே கமல் ஹீரோவாக நடிக்க துவங்கிவிட்டார். அதன்பின்னர் அவருக்கு பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்து அவர் இயக்கிய படங்களில் நடிக்க துவங்கினார்.

அதன்பின்னர்தான் கமல்ஹாசன் ஒரு நல்ல நடிகர் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. ஒருபக்கம் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் அறிமுகம் கிடைத்து அவர் இயக்கத்தில் கமல் நடித்த தூங்காதே தம்பி தூங்காதே, சகலகலா வல்லவன் ஆகிய படங்கள் கமலை ஒரு கமர்ஷியல் மசாலா ஹீரோவாக மாற்றி ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

ஆனந்த ஜோதி படத்தில் சிறுவனாக எம்.ஜி.ஆருடன் கமல் நடித்திருந்தாலும் பின்னாளில் அவருக்கு தம்பியாக நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. அந்த படம்தான் நாளை நமதே. இந்த படத்தை சேதுமாதவன் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் எம்.ஜி.ஆரின் குடும்ப பாடலாக ‘நாளை நமதே நாளை நமதே’ பாடல் காட்சி வரும். அதாவது அந்த பாடல் மூலம் பிரிந்திருந்த சகோதரர்கள் 3 பேர் ஒரு இடத்தில் ஒன்றாக சேர்வார்கள்.

இந்த படத்தில்தான் எம்.ஜி.ஆருக்கு தம்பியாக நடிக்கும் வாய்ப்பு கமலை தேடி வந்தது. ஆனால், தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்ததால் அவரால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை. ஆனால், அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதற்காக கமல் பல வருடங்கள் வருத்தப்பட்டாராம். ஒருமுறை தனது நண்பர் ஒருவரிடம் ‘யோசித்து பாருங்கள். எம்.ஜி.ஆருடன் இணைந்து ‘நாளை நமதே’ என நான் ஆடிப்பாடி நடித்திருந்தால் என் அரசியல் வருகைக்கு அது எவ்வளவு பலமாக இருந்திருக்கும்’ என சொன்னாராம்.
 

Leave a Reply