• Welcome to TamilsGuide
செய்திகள் 1

Animal

சினிமா

படம் துவங்கி ஒரு இரண்டு மணி நேரம் அனைவரும் பார்க்க கூடிய வகையில் தான் படம் இருந்தது ஆனால் அடுத்த 1.25 நிமிடங்கள் படம் சில பேருக்கு பிடிக்கும் சில பேருக்கு பிடிக்காமல் போகலாம். 

அளவுக்கு அதிகமாக தன் தந்தையை  நேசிக்கும் விஜய் சிங், தந்தை பல்வீர்  சிங், வியாபாரத்தில் பிசியாக இருந்த காரணத்தால் வீட்டில் உள்ளவர்களிடம் பாசத்தைக்காட்ட முடியாமல் போகிறது, மகன் இந்த ஏக்கத்தில் இருந்து இருந்து அதுவே அவர் மீத  இன்னும் அதிக பாசமாக மாறுகிறது, அதன் விளைவாக animal park க்கு நம்மை அழைத்து செல்கிறார் இயக்குனர் sandeep reddy vanga. 

Editing pattern அட்டகாசமா cut செய்து இருந்தார் இயக்குனர் vanga. 

இந்த படத்தில் நடித்தவர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருந்தனர் அதில் குறை சொல்ல ஒன்றும் இல்லை. 

படத்தின் பிரச்சினை என்னவென்றால் திரையில் காட்டகூடாத சிலவற்றை காட்டியது மற்றும் ராவாக எடுக்கிறேன் என்று அருவருப்பான சில வசனங்கள், காட்சிகள் படத்தின் தரத்தை கீழே இழுத்து விட்டது. 

விஜய் சிங் தன் காதலி வீட்டிற்கு சென்று உறவினர்கள் முன் பேசிக் கொண்டே இருக்கும் போது தன் காதலி இதழில் முத்தம் கொடுக்க இதை பார்த்த உறவினர்களும் கலைந்து செல்வதை கூட என்னால் ஏற்க முடிந்தது ஆனால் இவன் பங்காளி (அண்ணன்) Bobby deol மூன்றாவது முறையாக திருமணம் செய்ய போகும் பெண்ணை, தன் அண்ணன் இறந்த செய்தியை கேட்டு மனம் தாங்காமல், திருமணத்திற்கு வந்து இருக்கும் அனைத்து உறவினர்கள், குழந்தைகள் முன் நிலையில் கல்யாண கோலத்தில் இருக்கும் அந்த பெண்ணை சோபாவில் தள்ளி நடு வீட்டில் உடல்உறவில் ஈடுபடும் போது அனைவரும் கலைந்து செல்கிறார்கள்????. 

அண்ணன், தம்பி போட்டி போட்டு கொண்டு இந்த animal parkல் விளையாடி இருக்கிறார்கள் .இதை விட ஒரு தாராளா பிரபு படத்தின் இறுதியில் வருகிறான் அவன் ஒரு பங்காளி அண்ணன், தன் அண்ணியிடம் சென்று அண்ணன் இறந்து விட்டார் அதனால் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கத்தியுடன் கேட்க அவளும் சரி என்று தலையை ஆட்டுகிறாள், இந்த காட்சி வன்புணர்வை விட கொடுமையாக இருந்தது. 

அண்ணன் இறந்து விட்டான் மறுவாழ்வு என  பல படங்களில் மிக கண்ணியமாக கையாண்டு இருப்பார்கள் ஆனால் இதில் அண்ணி என்று அழுத்தி சொல்லி விட்டு என்னை திருமணம் செய்து கொள் என்று படம் எடுப்பது அந்த கதாபாத்திரத்தின் கொடூரத்தை காட்டவா இல்லை? 

திரும்ப கதாநாயகன் விஜய் சிங்கிடம் வருவோம்,என்னதான் பணம் கொழுத்து போய் இருந்தாலும் தன் ஜட்டியை சரியான முறையில் தன் பணி ஆட்கள் சலவை செய்யவில்லை என்று தன் ஜட்டியை கழட்டி பணி ஆட்கள் ஒருவருக்கு போட்டு விடுவது, எனக்கு அரிக்குது என்று கத்துவது அதற்கு அவன் மனைவி ராஷ்மிக்க அவனை அடக்காமல் இன்னைக்கு ஒரு நாள் ஜட்டி போடதே என்று சொல்வதை என்னவென்று சொல்வது. 

தன் பணி பெண்னை வைத்து கொண்டே தன் மனைவியின் உடைகளை களைந்து கட்டி பிடிப்பது (எதற்கு இந்த காட்சி படத்திற்கு எந்த வகையில் பயன்) 

இதைவிட உச்சம் தன் மனைவியின் உள்ளாடை(Bra) elastic யை இழுத்து இழுத்து விட்டு அவள் முதுகு சிவந்தவுடன் மயில் இறகை கொண்டு மருந்து போட்டு விடும் animal. (கற்பனையாக தோன்றிய காட்சிகள் இல்லை இது ,அனுபவத்தில் வைத்த காட்சியாக தான் தெரிகிறது. 

இன்னொரு பெண் பங்காளி animal மூலமாக வருகிறாள் ஒரு கதையை எடுத்து கொண்டு ,அதையும் விட்டு வைக்கவில்லை முடிச்சிட்டு மூடிக்கிட்டு போக வேண்டியது தானே, தன் மனைவியிடம் சொல்ல அந்த அம்மா என் performance ஆ பாருங் என்று எங்க கை வச்ச என்னவிட சூப்பரா, என் கூட செஞ்ச மாதிரி செஞ்சிய இல்லை different அ பண்ணியா, உடனே washroom போய்ட்டியா இல்ல என் மேலே படுத்து இருந்த மாதிரி படுத்தியா என்று perform பண்ண விட்டு இருக்கிறார் இயக்குனர் (tamil dubbing & writing )

ஏன்டா சொந்த வீடா  இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா, Nude அ கதாநாயகன் விஜய் சிங் வீட்டின் வெளியே நடந்து வருகிறார் இதை அவரின் தாய், தந்தை மாடியில் இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் .இவன் இப்படி என்றால் அவன் மச்சான் (அக்கா) வீட்டுக்குள் ஜட்டியுடன் தான் உட்கார்ந்து கொண்டு இருக்கிறான் இவனுக்கு எதுக்கு டா Low angle shot. 

முதல் இரண்டு மணி நேரத்தில் படத்தை முடித்து இருக்கலாம் சிறப்பான வரவேற்பு கிடைத்து இருக்கும் இந்த கடைசி ஒரு மணி நேரம் தான் பிரச்சனை. 

*ரமேஷ் ராம்

Leave a Reply