• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்கவே முடியாத வில்லனாக வலம் வந்தவர் நம்பியார்

சினிமா

தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்கவே முடியாத வில்லனாக வலம் வந்தவர் நம்பியார். ஒவ்வொரு படத்திற்கும் வில்லன் கேரக்டர் வலுவானதாக இருந்தால் அந்த படம் வெகு சுவாரசியமாக அமையும். அந்த வகையில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர் உள்ளிட்ட ஹீரோக்களுக்கு இணையாக நம்பியார் வில்லன் வேடத்தில் அட்டகாசமான நடிப்பை பல படங்களில் வெளிப்படுத்தி இருந்தார்.
1960, 70 களில் பல வில்லன்கள் இருந்தாலும் அவர்களில் தனித்துவமாக ரசிகக்ளின் மனதை கவர்ந்தவர்தான் நம்பியார். வசனம் கூட அவர் பேசத் தேவை இல்லை. ஆனால் கண்கள், முக பாவனை உள்ளிட்ட உடல் மொழிகளால் அவர் பார்ப்போரை பதை பதைக்க செய்து விடுவார். நம்பியாருக்கு சொந்த ஊர் கேரள மாநிலம் கண்ணூர் ஆகும்.

மாஞ்சேரி நாராயண நம்பியார் என்பதனை தான் சுருக்கமாக எம்.என்.நம்பியார் என்று அழைத்தனர். இளம் வயதில் தனது தந்தையின் மறைவுக்கு பின்னர் அவர் ஊட்டிக்கு இடம் மாறினார். முதலில் நாடகங்களில் நடித்த நம்பியாருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட நடிகர்களுக்கு போட்டி கொடுத்து நடித்தார்.
தொடர்புடைய செய்திகள்
கட்டபொம்மனுக்கு சொந்தப் பணத்தில் சிலை நிறுவிய சிவாஜி கணேசன்
அண்ணாவின் அறிவுரையுடன் வெளியான கமலின் சினிமாப் பைத்தியம்
பாரதிராஜாவின் கடலோரக் கவிதைகளுக்கு முன்னோடியாக அமைந்த பாலசந்தர் படம்
இன்டஸ்ட்ரி ஹிட்டான சிவாஜியின் திரிசூலம் படத்தின் சாதனைகள்
குறிப்பாக எம்ஜிஆர் - நம்பியார் படங்களுக்கு அதிகமான வரவேற்பு காணப்பட்டது. ஒரு படத்தில் நம்பியார் இடம் பெறுகிறார் என்றால் அந்தப் படத்தை பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டினர். படங்களில் கொடூரமான வில்லனாக நடித்த நம்பியார், தனது நிஜ வாழ்க்கையில் தங்கமான மனிதராக வாழ்ந்தார் என்று பல்வேறு தரப்பினர் கூறியுள்ளனர்.
ஒருமுறை நம்பியாரின் நடிப்பை பாராட்டி பிரபல பத்திரிகையாளர் அவருக்கு கடிதங்களை எழுதிக் கொண்டே இருந்திருக்கிறார், இருப்பினும் அதற்கு நம்பியார் பதில் அளிக்காமல் இருந்தார், பின்னாளில் நேரம் கிடைத்த போது பதில் கடிதம் எழுதினார்,
அந்த கடிதத்தில் ‘எனது படங்களை எத்தனை விருப்பத்துடன் நீங்கள் பார்த்துள்ளீர்கள் என்பதை உங்களது கடிதங்கள் எனக்கு தெரியப்படுத்துகிறது. உங்களைப் போன்ற ரசிகர்களால் தான் சினிமா சிறப்பாக உள்ளது. நான் சுமாரான நடிகர்தான். எம்ஜிஆர், சிவாஜி போன்றவர்கள் இருக்கும்போது, அவர்களை விட நான் எப்படி சிறப்பாக நடிக்க முடியும்?’ என்று கூறி, தாமதமாக கடிதம் எழுதியதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார் நம்பியார். இது குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்து நம்பியார் மீதான மதிப்பை அதிகரிக்க செய்துள்ளன.

நன்றி:News18 தமிழ்.

Leave a Reply