• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாரதி படத்தில், செல்லம்மாவாக அவர் நடித்த விதம், மிகவும் லயித்து விட்டேன்.

சினிமா

எல்லோரும் ராமாயணத்தில் ராமன் பண்புகள் மிக சிறந்தது என்று சொல்வார்கள். ஆனால் எனக்கு கொஞ்சம் வித்தியாசமாக, சீதையின் பண்புகள் தான் தெரியும். அதுபோல் பாரதியார் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், அவர் துணைவியார் செல்லம்மா பட்ட கஷ்டங்கள் நினைத்தால் கண்ணீர் வரும். பாரதி வேடம் யார் நடிப்பவர்? என்று தான் எல்லோரும் கேட்டார்கள்.
சாயாஜி ஷிண்டே என்ற மராட்டி நடிகர் பாரதியாகவே அற்புதமாக நடிததார். ஆனால் தேவயானி ஒரு படி மேலே போய், செல்லம்மாவாக நடிக்கவில்லை வாழ்ந்தார்!
அடுத்து, தமிழ் கலாச்சாரத்திற்கு ஏற்ற நடிகை. காதல் கோட்டை திரைப்படத்தில் அக்கா தங்கை கதாபாத்திரத்தில், அக்காவாக ஒரு முஸ்லிம் நடிகை ( பெயர் தெரியவில்லை ), தங்கையாக தேவயானி ஒரு தமிழ் பெண்ணாக தோன்றியிருப்பார். காரணம் படத்தின் இயக்குனர் அகத்தியன்.
ஆனால் மணிரத்தினம், அலைபாயுதே என்ற படத்தில் அக்கா தங்கை கதாபாத்திரங்கள் காட்டியிருப்பார். தமிழ் கலாச்சாரத்தை விட்டு விலகி, படிப்பதற்கு பதிலாக காதல் செய்வது, சொந்த தங்கை காதலிக்க அக்கா, டாபர் வேலை செய்வது போன்ற காட்சிகளை பார்த்து திடுக்கிட்டு விட்டேன்.
மாதவன் ஒரு காட்சியில், அக்கா சொர்ணமால்யாவை கட்டிப்பிடிப்பார். எந்த வீட்டில் மச்சினிச்சியை கட்டி பிடிக்க முடியும்?
மணிரத்னம் செய்வாரா? அவர் மட்டும் தமிழ் கலாச்சாரத்தில் வாழ்ந்து, தமிழ் பெண்களை கெடுப்பது போல் உள்ளது இது.
தேவயானி வடநாட்டில் பிறந்தாலும், மற்ற நடிகைகள் போல் இல்லாமல் தமிழ் கலாச்சாரத்தில் வாழ்கிறார். சமீபத்தில் அவர் ஆசிரியராக வேலைக்கு சேர்ந்ததாக கேள்விப்பட்டேன். அவரை நான் பொது இடங்களில் பார்த்து உள்ளேன். மிக மிக நல்ல குணங்கள் கொண்ட நடிகை அவர்.
எல்லா பெண்களும் நல்லவர்கள் தான் என்றாலும், பெண்களுக்கு பிளஸ் மைனஸ் இரண்டுமே உண்டு. நல்ல குணங்களை மேம்படுத்தி, தவறான குணங்களை ஒதுக்குவது தான் நமக்கு நல்லது.
அதுபோல் அவர் ஆரம்பத்தில், வியாபார நோக்கத்தில் சில தவறான கதாபாத்திரத்தில் நடித்தாலும், காதல் கோட்டைக்குப் பிறகு அவர் நடித்த எல்லா கதாபாத்திரங்களும் மிக அழகாக நடித்திருந்தார்.
படையப்பா என்ற திரைப்படத்தின் டைரக்டர் கே எஸ் ரவிக்குமார். அதில் அவர் சௌந்தர்யாவுக்கு பதிலாக தேவயானி போட்டிருந்தால், பிரமாதமாக நடித்திருப்பார் அந்த பாத்திரத்திற்கு. இது எனது கருத்து!
பஞ்சதந்திரம் என்ற படத்தில் அதே ரவிக்குமார், ஒரு சிறு காட்சிக்கு அவரை நகைச்சுவைக்காக பயன்படுத்தி இருப்பார்.
அவர் தோன்றிய அந்த ஐந்து நிமிடமும் கமலஹாசன் உடன் அவர் நகைச்சுவையில் கமலஹாசனுக்கு ஈடாக தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.
ஹே ராம்! என்று அவர் குழந்தைத்தனமாக கூறுவது,
யாரு அந்த பொம்பள?

அப்படியே, என்ன தட்டி தூங்க வை, ராம்!!
ராமன்னா, ராம்மன்னா!! கமல்ஹாசனைப் பார்த்து அவர் கத்துவது,
இப்ப சொல்லு!! அவ இருக்கும் போது சொல்ல வேண்டியதுதானே!! என்று கமல் சொல்ல,
யார் கர்ப்பம்? என்று அவர் கமலஹாசனை கேட்கும் போது, சிம்ரன் நடிப்பை விட தேவயானி நடிப்பு பிரமாதமாக இருக்கும். சிம்ரன் பாத்திரத்திற்கு தேவையானியை போட்டு இருக்கலாம். அந்த பாத்திரத்திற்கு சரியாக வந்திருப்பார்.
தேவயானி தவறவிட்ட கதாபாத்திரங்கள் நிறைய. சொல்லப்போனால் பஞ்சதந்திரத்தில் அவர் கதாநாயகி வேஷத்தில் தான் நடிக்க ஆசைப்பட்டார். ஆனால் திருமணம் ஆன காரணத்தால் அவரை தமிழ் திரைஉலகம் ஒதுக்கி விட்டது.
காதல் கோட்டை திரைப்படத்தில் அவர் ஒரு தமிழ் பெண்ணாக நடிக்க இயக்குனர் தான் காரணம் என்றாலும், தமிழ் கலாச்சாரத்தில் படம் எடுக்க விரும்பாத மணிரத்தினம் சங்கர் போன்றவர்கள் தேவயானி போன்ற நடிகைகளை விட்டு விடுகிறார்கள்.
அஜித்துடன் நடித்த அவர், கமலஹாசன் விக்ரம் போன்ற நடிகர்களுடன் நடித்த அவர், ரஜினிகாந்துடன் நடிக்காமல் போனது வருத்தம் தான்.
பாரதி படத்தின் இயக்குனர் மிகச் சிறந்த இயக்குனர். காதல் கோட்டை அகத்தியனும் நல்ல இயக்குனர். நல்ல இயக்குனர்களின் தேர்வாக அவர் இருப்பதிலிருந்து, அவர் ஒரு மிகச் சிறந்த நடிகை தான் என்று நிரூபணம் ஆகிறது.
தமிழ் கலாச்சாரத்தை விட்டு விலகி படம் எடுக்கும் மணிரத்னம் போன்றவர்கள், தேவயானி போன்ற நடிகைகள் மேலே வருவதை தடுக்கிறார்கள்.
பொன்னியின் செல்வன் படத்தில் அவர், நடிக்க வைத்த எந்த நடிகையும் சோபிக்கவில்லை. மணிரத்தினத்துக்கு தமிழ் கலாச்சாரம் பிடிக்கவில்லை. அது அவர் படங்களில் தெளிவாக தெரிகிறது.
வட நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் தேவயானிக்கு தமிழ் கலாச்சாரம் மிகவும் பிடித்துள்ளது. அவர் நடித்துள்ள படங்களிலிருந்து இது தெளிவாக தெரிகிறது.
எனக்கு என்னவோ தேவயானி போன்ற நல்ல நடிகைகள், தமிழ் திரை உலகத்தால் சரியாக பயன்படுத்தப்படவில்லை என்பதே என் அபிப்பிராயம். மொத்தத்தில் எனக்கு பிடித்த நடிகை அவர். தேவயானியின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்த பாடல், பிரண்ட்ஸ் என்ற திரைப்படத்தில், " தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா ",
தெனாலி என்ற படத்தில் ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்ததா ", ஆகிய இரண்டு இளையராஜா ரகுமான் பாடல்கள் மற்றும் சூரியவம்சம் படத்தில் "காதலா காதலா" என்ற பாடல் நன்றாக இருக்கும்.
தேவயானியில் நடன அசைவுகள் மற்றும் அவரது எல்லா விதமான உடைகளிலும் ஒரு நளினம் மற்றும் நேர்த்தி இருக்கும்.
சென்னை அசோக் நகரில், ஆஞ்சநேயர் கோவில் எதிரே அவருடைய வீட்டின் பெயர், " கமலி அப்பார்ட்மெண்ட்ஸ் " என்று இருப்பதை பார்த்தேன். நான் அசோக் நகர் செல்லும் போதெல்லாம், தேவயானி வீட்டை தான் பார்ப்பேன். அவர் கணவர் வாசலில் நின்று கொண்டிருப்பார் சில சமயம். ஆனால் அந்த வீட்டின் பெயர் கமலி என்று வைத்துள்ளது, காதல் கோட்டை படத்தில் அவர் கேரக்டர் பெயர் கமலி என்பதை ஞாபகப்படுத்துகிறது!.......

Rj Nila

 

Leave a Reply