• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கேனரி தீவில் மனைவியுடன் மலையேறி சென்ற பிரித்தானியர் உயிரிழப்பு

சினிமா

கேனரி தீவில் மனைவியுடன் மலையேற சென்ற 53 வயது பிரிட்டிஷ் மலையேறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை Gran Canaria-வில் உள்ள Pico de Las Nieves பகுதியின் 6,390 அடி உயர மலைகள் மீது மனைவியுடன் மலையேறி சென்று லுக்அவுட் புள்ளியை பார்வையிட சென்ற 53 வயது பிரிட்டிஷ் மலையேறி தவறி விழுந்து விபத்தில் சிக்கியுள்ளார்.
  
திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு விபத்தில் சிக்கியவரின் மனைவி எழுப்பிய அபாய எச்சரிக்கைக்கு பிறகு மீட்பு பணிகள் தொடங்கப்பட்டது.

அவசர சேவைகளின் ஹெலிகாப்டர் குழு நடத்திய தேடலில் செவ்வாய்க்கிழமை உள்ளூர் பொலிஸாரால் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை பொலிஸார் தொடங்கியுள்ளனர்.

அத்துடன் உயிரிழந்தவரின் நாட்டு குடியுரிமையை வெளிப்படுத்திய பொலிஸார், பிரிட்டிஷ் மலையேறியின் இழப்பு ஒரு துரதிர்ஷ்டமான விபத்து என்று தெரிவித்துள்ளனர். 
 

Leave a Reply