• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரித்தானியாவில் ஓடும் வேனில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த இளம் பெண்

பிரித்தானியாவில் ஓடும் வேனில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த இளம்பெண் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் வேக்ஃபீல்ட்(Wakefield) பகுதியில் ஓடும் வேனில் இருந்து கீழே விழுந்த இளம்பெண் குறித்த தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
  
புதன்கிழமை இரவு கால்டர் க்ரோவில்(Calder Grove) உள்ள டென்பி டேல் சாலையில் சென்று கொண்டு இருந்த white Ford Transit வேனில் இருந்து (Denby Dale Road) 27 வயதுடைய லியா சீனியர் (Leah Senior) என்ற இளம் பெண் கீழே விழுந்தார்.

ஹடர்ஸ்ஃபீல்ட்(Huddersfield) பகுதியை சேர்ந்த லியா சீனியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தில் 25 வயதுடைய Kirklees என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது மற்றும் போதையில் வாகனம் ஓட்டியது ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விவரம் தெரிந்தவர்கள் உடனடியாக மேற்கு யார்க்ஷயர் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி 20:30 முதல் 20:45 மணிக்குள் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Leave a Reply