• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காதல் The core…. With spoilers ...

சினிமா

இந்த படத்தில் அவரை தவிர வேறெவர் நடித்திருந்தாலும் இத்தனை ரம்மியமாய் இருந்திருக்காது என்று கூறுமளவு மம்முட்டி வலியுடன் வாழ்ந்திருக்கிறார். சரிதாவுக்கு அப்புறம் கண்களால் கலங்கடிக்கும் ஆக்ட்ரஸ் ஜோதிகா. அவருக்கு தினமும் கல்லமிட்டாய் வாங்கி வரும் மாமானார், மம்முட்டியின் ஈர்ப்பினராக வரும் சுதி என சரியான தேர்வுகள். அத்துடன் கேரளப் பசுமை... 

ஹீரோ சமூகத்தில் மதிப்பு மரியாதையுடன் வாழ்பவர். மனைவி சராசரி பெண்ணாக வாழ விரும்புபவர். ஹீரோ லோக்கல் வார்டுக்கு தேர்தலில் போட்டியிடும்போது அவர் gay என்ற குற்றச்சாட்டுடன் மனைவி விவாகரத்து கோருகிறார். இருவரும் ஒட்டுதல் இல்லாமல் சிறகுகள் வெட்டி கூண்டிலடைக்கப்பட்ட பறவைகளாய் வாழ்ந்ததாய் கூறுகிறார்.

அத்தனை காலம் சமூகத்தில் கட்டிக்காத்த மரியாதை கேலிக்குள்ளாகிறது. குடும்பம் நிலைகுலைகிறது. சமுதாயம் கேலியை ஆயுதமாய் எடுக்கிறது. 

ஒரு சொல் உயராமல், கோபம் சிதறாமல், கண்ணியம் குலையாமல் வீட்டிலேயே தொடர்ந்து வசிக்கின்றனர். இது உண்மையில் சாத்தியமா என வியப்பேற்படுகிறது..

19 வயது மகளிருக்க, 20 வருடங்களுக்கு பின் ஏன் விவாகரத்து? அதுவரையில் பொறுத்த மனைவி எஞ்சிய காலத்திலும் அப்படியே இருந்தாலென்ன, இதற்கப்புறம் என்ன இருக்கு போன்ற கேள்விகள் உனக்காகவும்தான் கேட்டேன் என்ற ஒற்றை வாக்கியத்தில் அடிபடுகிறது.

கணவன் மனைவியின் நெருக்கமற்ற அன்பு , மகனின் உண்மை நிலையறிந்த அப்பாவுக்கும் மகனுக்குமான சங்கடமான உறவு, சமூகம் புறக்கணிக்கும் இரு ஆண்களின் காதல் என பலரின் குமுறல்களாய் படம் பயணிக்கிறது.  

கோர்ட் சீன்களில் ஹீரோவை அவமானப்படுத்தி பரிதாபம் கூட்ட முயலாமல் கண்ணியமாய் வாதிடுகின்றனர்.  இறுதியில் மகிழ்ச்சியான முடிவு துயரத்தையே ஏற்படுத்துகிறது. சமுதாயத்தின் நியதிகளை தளர்த்த முயலும் படம். மாற்று கருத்துகள் இருக்கலாம் எனினும் படமாக்கப்பட்ட விதமும், நடிப்பும் பேரழகு. மெல்லினத்திற்கான மூவி 

Ashok Kumar

Leave a Reply