• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டியப் பேரொளி பத்மினியுடன் நடனப் போட்டி - எம்.ஜி.ஆரிடம் இதை யாரும் எதிர்பார்க்கவே இல்லை

சினிமா

படத்தில் மணிவண்ணன் என்ற கேரக்டரில் எம்.ஜி.ஆரும், கற்பகவல்லி என்ற கேரக்டரில் பத்மினியும் நடித்திருந்தனர்.

எம்.ஜி.ஆர் தனது திரைப்படங்களில் நாயகிகளுடனும் மக்களுடனும் நடனமாடியதை பார்த்திருக்கலாம். ஆனால் எம்.ஜி.ஆர் இவ்வளவு நளினமாக பரதநாட்டியம் ஆடுவார் என்பது பலரும் அறியாத உண்மை என்று சொல்லும் அளவுக்கு நடிகை பத்மினிக்கு போட்டியாக பரதநாட்டியத்தில் களமிறங்கிய அசத்தியுள்ளார் எம்.ஜி.ஆர்.

1960-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் பத்மினி நடிப்பில் வெளியான படம் மன்னாதி மன்னன். பி.எஸ்.வீரப்பா, எம்.ஜி.சக்கரபாணி, அஞ்சலி தேவி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு கண்ணதாசன் கதை எழுதியிருந்தார். எம்.நடேசன் என்பர் இயக்கி தயாரித்திருந்தார். புராண காலத்தில் மன்னர்கள் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆகியோர் இசையமைத்திருந்தனர்.

இந்த படத்தில் மணிவண்ணன் என்ற கேரக்டரில் எம்.ஜி.ஆரும், கற்பகவல்லி என்ற கேரக்டரில் பத்மினியும் நடித்திருந்த நிலையில், கரிகாலசோழனாக எம்.ஜி.சக்கரபாணி, கனிகண்ணாக பி.எஸ்.வீரப்பா நடித்திருந்தனர். 1960- காலக்கட்டத்தில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. புராண காலத்து கதை என்பதால் படத்தில் 14 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த படத்தின் ஒரு காட்சியில் மன்னர் கனிகண்ணன் முன்னிலையில் எம்.ஜி.ஆர் பத்மினி இடையே நடனப்போட்டி நடைபெறும். இதில் முதலில் நடனமாடும் பத்மினி அனைவரையும் அசத்தும் வகையில் தனது தனித்துவமாக நடனத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பார். சிறிது நேரம் கழித்து களமிறங்கும் எம்.ஜி.ஆர் பத்மினிக்கு இணையாக நடனத்தில் அசத்தி இருப்பார்.

தமிழச்சி கயல்விழி

Leave a Reply