• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டை ஆள்பவர்களோ அரசியல்வாதிகளோ ஏழைகளின் கண்ணீரை துடைக்க முன்வருவதில்லை

இலங்கை

மக்கள் துன்பத்தில் வாடும் நிலையில் அரசியல்வாதிகள் அக்கறையில்லாது இருக்கிறார்கள் என செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்தார்.
  
நாட்டை ஆள்பவர்களோ அரசியல்வாதிகளோ ஏழை மக்களை பற்றி கவலைப்படுவதில்லை கண்ணீரை துடைப்பதற்கோ முன்வருவதில்லை எதுவாக இருந்தாலும் மனிதனின் அடிப்படை தேவையாகிய உணவு,சுகாதாரம்,இருப்பிடம் இவை முன்றிற்கும் இந்த நாட்டில் கஸ்ரமான சூழல் ஏற்பட்டுள்ளது பஞ்சம் என்பது வெளிப்படையாக தெரியாவிட்டாலும் ஒருவேளை நல்ல உணவை உண்ண முடியாது தவிர்த்து வருபவர்கள் ஏராளம் பேர் இருக்கிறார்கள் .

மரக்கறியாக இருந்தால் என்ன உணவுபண்டங்கள் என்றால் என்ன விலைகள் மிக அதிகமாக அதிகரித்து உள்ளது.ஒரு சாதாரண பணியில் இடுபட்டுள்ள அன்றாட உத்தியோகம் பார்பவர்கள் கூட களைப்பைபோக்குவதற்கு தேநீர் அருந்தகூட முடியாத நிலை உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

இத்தகைய நிலையில் நிறுவனங்கள் அதற்கு ஏற்ப சம்பளத்தை கொடுக்க முடியாத நிலையில் வருவாய் அற்ற நிறுவனங்களாக செயற்பட்டுவருகிறது.

வடக்கில் வந்த துன்பம் என்னவென்றால் தென்னிலங்கையை சேர்ந்த பெரிய நிறுவனங்கள் பல்பொருள் அங்காடி என்ற பெயரில் பெரிய அங்காடிகளை உருவாக்கி பணத்தை திரட்டி கொண்டு செல்கிறார்.

இதனால் கிராமத்தில் உள்ள வர்த்தகர்கள் ,வாணிபர்கள் ,பெட்டிக்கடைகள் வியாபாரத்தை இழந்து முடும்நிலை ஏற்பட்டுள்ளது,தென்னிலங்கையில் இருந்து வியாபாரம் செய்யும் பலபொருள் வாணிபங்கள் கடன்கள் வழங்கமாட்டார்கள் .

இத்தகைய பொருளாதார சூழ்நிலையில் கடன் இல்லை ,உணவில்லை ,நெருக்கடியான சூழலில் மக்கள் தவிக்கிறார்கள் .

உண்மையான மக்களின் உணர்வுபூர்வமான பிரச்சினையை யாரும் அறிந்து கொள்வதில்லை வேடிக்கையான பேச்சுக்களை நாங்கள் நடாத்திக் கொண்டிருக்கிறோம் கூட்ங்களை நடாத்திக் கொண்டிருக்கிறோம்.ஏழை மக்களை யாரும் திரும்பி பார்ப்பதில்லை.

இலங்கை மக்களின் மிக முக்கியமான உணவு தேவையை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கமும் அனைத்து அரசியல் தலைவர்களும் அதற்காக உருப்படியான வேலைகளை செய்து மூன்று வேளையும் மக்கள் கஸ்ரப்படாது உணவை உட்கொள்ள வழிசெய்ய முடியாத நிலையில் என்னதான் வாய் வீரம் பேசுவதனாலும் அர்தம் இல்லை இத்தகைய அரசியல் சூழலால் தான மக்கள் நாட்டை வீட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள் .

வெளியேறவும் வசதியில்லாத எழைகள் வாடி வதங்கி கொண்டிருக்கிறார்கள். நல்ல சுகாதாரமான உணவு கிடைக்காது எத்தனையோ குழந்தைகள் நோயால் வாடுகிறார்கள் இவற்றை யாருக்கு எடுத்துரைப்பது என்று சிந்திப்பதை தவிர வேறுவழியில்லை எல்லாம் வல்ல இறைவனே காத்தருள வேண்டும் என்றார்.
 

Leave a Reply