• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கையில் 14,000 ஆயிரம் கால்நடை பண்ணைகளுக்கு பூட்டு

இலங்கை

இலங்கையில் 14,000 கால்நடை பண்ணைகள் பல்வேறு காரணங்களால் அண்மையில் மூடப்பட்டுள்ளதாக அரசாங்கக் கணக்குகள் தொடர்பான நாடாளுமன்றக் குழு அல்லது கோபா குழுவில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு மூடப்பட்டுள்ள பெரும்பாலான பண்ணைகள் சிறிய அளவிலானவை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பண்ணைகளில் கால்நடைகள் திருட்டு போவது அதிகரித்துள்ளதால் அவை மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், விலங்குகள் திருட்டு காரணமாக சிறு பண்ணைகள் மூடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கோபா குழு தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 104 ஆடுகள் இம்புலதண்டா மற்றும் தெலஹெர ஆடு வளர்ப்பு நிலையங்களில் இறந்தது குறித்தும் குழு கவனம் செலுத்தியுள்ளது.
 

Leave a Reply