• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரித்தானியர்களுக்கு புடினால் வரவிருக்கும் ஆபத்து

ரஷ்யா கொண்டுவர இருக்கும் ஒரு சட்டத்தால், பிரித்தானியர்களின் விருப்ப உணவொன்றிற்கு ஆபத்து ஏற்பட உள்ளது. பிரித்தானியர்களின் விருப்ப உணவுகளில் ஒன்று, fish and chips ஆகும். மாவில் தோய்த்துப் பொறித்த மீனும், நீளமாக வெட்டிப் பொறித்த, ஃப்ரென்ச் ஃப்ரை போன்ற உருளைக்கிழங்குத் துண்டுகளும் கொண்ட இந்த உணவு, சிப்பி ஃபிஷ் என்றும் அழைக்கப்படுகிறது.
  
உக்ரைன் மீது ரஷ்யா போர் துவங்கியதிலிருந்தே, அந்நாட்டின் மீது பிரித்தானியாவும் அதன் நட்பு நாடுகளும் பல்வேறு தடைகள் விதித்தன.

குறிப்பாக, ரஷ்யாவிலிருந்து பிரித்தானியா செய்யும் இறக்குமதியில் 94 சதவிகிதத்தை பிரித்தானியா நிறுத்திவிட்டது.

பதிலுக்கு, ரஷ்யா ஒரு அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளது. அதுதான் பிரித்தானியர்களின் விருப்ப உணவுக்கு பிரச்சினையை ஏற்படுத்த உள்ளது.

அதாவது, 1956ஆம் ஆண்டு, ரஷ்யா, சோவியத் யூனியனாக இருந்தபோது, பிரித்தானிய மீன்பிடி படகுகள், ரஷ்யா மற்றும் நார்வே எல்லையோரமாக அமைந்துள்ள Barents கடலருகே மீன் பிடிக்க அந்நாடு அனுமதி வழங்கியது. அதற்காக, Barents Sea deal என்னும் ஒப்பந்தமும் இரு நாடுகளுக்குமிடையில் கையெழுத்தானது.

தற்போது, ரஷ்யா மீது பிரித்தானியா முதலான நாடுகள் தடைகள் விதித்துள்ள நிலையில், அந்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அல்லது செல்லாததாக்க ஒரு சட்டத்தைக் கொண்டு வரும் நடவடிக்கைகளை ரஷ்யா துவங்கியுள்ளது.

அந்த சட்டம் கொண்டுவரப்படுவதால் ரஷ்யாவுக்கு எந்த நஷ்டமும் இல்லை. ஆனால், பிரித்தானிய உணவான fish and chips உணவுக்குத் தேவையான cod மற்றும் haddock வகை மீன்களில் 40 சதவிகிதம் ரஷ்ய கடற்பகுதியில்தான் பிடிக்கப்படுகின்றன.

ஆக, பிரித்தானியா இனி அங்கு மீன் பிடிக்கமுடியாமற்போனால், இந்த மீன்கள் கிடைப்பது பிரச்சினையாகிவிடும். மீன்கள் குறைவாக கிடைத்தால், fish and chips உணவின் விலையும் அதிகமாகிவிடும்.

இப்போதே அந்த உணவின் விலை 11 பவுண்டுகள். இந்திய மதிப்பில் 1,258 ரூபாய், இலங்கை மதிப்பில் 4,481 ரூபாய் ஆகும். ஆக, புடினுடைய நடவடிக்கையால், பிரித்தானியர்களில் பலர் தங்கள் விருப்ப உணவை எப்போதாவதுதான் சாப்பிடமுடியும் என்ற நிலை ஏற்படலாம்! 
 

Leave a Reply