• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அடுத்தடுத்து தடை... நம்பிக்கை இழந்த விஜயகாந்த் - மெகாஹிட் படத்திற்கு வந்த சோதனை

சினிமா

விஜயகாந்த் நடிப்பில் பூந்தோட்ட காவல்காரன் படத்தை இயக்கிய இயக்குனர் செந்தில்நாதன் அந்த படம் குறித்து பேசியுள்ளார்.

நண்பர் ராவுத்தரின் எதிர்ப்பை மீறி புதுமுக இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் அவருக்கே அந்த படத்தின் மீது நம்பிக்கை போய் விட்டது என்று படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தனக்கென தனி ஆளுமையை வளர்த்துக்கொண்டவர் விஜயகாந்த். தற்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் திரைத்துறையில் இருந்து ஒதுங்கி இருந்தாலும், அவருடன் இணைந்து பணியாற்றிய இயக்குனர்கள் மற்றும் நண்பர்கள் என பலரும் விஜயகாந்த் குறித்து தங்களது நெகிழ்ச்சியாக சம்பவங்களை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் விஜயகாந்த் நடிப்பில் பூந்தோட்ட காவல்காரன் படத்தை இயக்கிய இயக்குனர் செந்தில்நாதன் அந்த படம் குறித்து பேசியுள்ளார். உழவன் மகன் படம் முடிந்த பிறகு அடுத்த படம் நீங்கள் தான் இயக்க வேண்டும் என்று விஜயகாந்த் என்னிடம் சொன்னார். அதனைத் தொடர்ந்து கதை விவாதத்திற்காக ஹோட்டலில் ரூம் எடுத்து கொடுத்து 15 நாட்களுக்குள் கதை தயார் செய்ய சொல்லி சொன்னார்.

அப்போது ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் ஒரு படத்தில் விஜயகாந்த் நடித்துக்கொண்டிருந்தார். அதில் ஒரு காட்சி சூட்டிங்கின்போது டம்மி புல்லட்டின் துகள் ஒன்று விஜயகாந்த் கண்ணை தாக்கியது. அவர் உடனடியாக ஹாஸ்பிட்டலில் சேர்க்கப்பட்டு கண்ணில் கட்டுபோட்டிருந்தார். அப்போது நான் அவரை பார்க்க போனேபோது என்ன செந்தில் கதை ரெடியா எப்படி போய்ட்டு இருக்கு என்று கேட்டார்.

அதற்கு ராவுத்தர் இல்லை அவர் படம் கண்பார்ம் பண்ண உடனே உனக்கு கண்ணில் அடிப்பட்டுவிட்டது. அதனால் செண்டிமெண்டாக இந்த படம் வேண்டாம் அதான் ஹோட்டல் ரூமை காலி செய்ய சொல்லிவிட்டேன் என்று சொன்னார். அதற்கு விஜயகாந்த் என் கண்ணில் அடிப்பட்டதுக்கும் அவன் படம் இயக்குவதற்கும் என்ன சம்பந்தம். நீ சும்மா இரு.. செந்தில் நீ ஹோட்டல் அறையில் தங்கி கதை ரெடி பண்ணு என்று சொன்னார்.

அவர் சொன்னபடி கதையை ரெடி பண்ணி ஷூட்டிங் போனோம். ஒரு மாதத்தில் ஷூட்டிங் முடிக்க ப்ளான் செய்து போனோம். இன்னும் ஒரு வாரமே ஷூட்டிங் இருந்தபோது படத்தில் நடித்த ஆனந்த்க்கு கால் முறிந்து 2 மாதங்கள் ஷூட்டிங் நின்றுவிட்டது. அதன்பிறகு ஷூட்டிங்கை முடித்து படத்தின் ரீ-ரெக்கார்டிங்காக இளையராஜாவுக்கு படத்தை திரையிட்டோம். அப்போது அவருடன் படம் பார்க்க வந்த ஒருவர் படம் நல்லா இல்லை என்று சொல்லிவிட்டார். மேலும் டிஸ்டிபியூட்டர் ஒருவரிடம் போன் செய்து படம் நல்லா இல்லை என்று சொல்ல அவர் விஜயகாந்திடம் போன் செய்து கொடுத்த அட்வான்ஸ் படத்தை திருப்பி வாங்கிவிட்டார்.

படம் விற்றதே ஒரு ஏரியாதான் அதையும் திருப்பி வாங்கிக்கொண்டார்கள். இந்த படம் ரீ-ரெக்கார்டிங் போக வேண்டாம் என்று நிறுத்திவிட்டார்கள். இதனால் நான் மீண்டும் உதவி இயக்குனராக சேர நினைத்தேன். இனிமேல் இயக்குனராக வரவே வேண்டாம் என்று முடிவு செய்திருந்தேன். ஒரு வாரம் கழித்து விஜயகாந்த் என்னை அழைத்து படம் ரீ-ரெக்கார்டிங் போய்ருக்கு போய் பாரு என்று சொன்னார்.

மேலும் யார் என்ன சொன்னாலும் சாரி படம் எனக்கு பிடிச்சிருக்கு. கண்டிப்பா ரிலீஸ் பண்ணுவோம் என்று விஜயகாந்த் சொன்னார். அதன்படி ரீ-ரெக்கார்டிங் முடிந்து டிஸ்டிபியூட்டர்களுக்கு போட்டு காண்பித்தோம். அப்போது விஜயகாந்த் ராவுத்தர் இருவருமே வரவில்லை. படம் பார்க்க சென்ற நான் டிஸ்டிபியூட்டர்கள் என்ன சொல்வார்கள் என்று நினைத்து வெளியில் வந்துவிட்டேன். ஆனால் படம் முடிந்து டிஸ்டிபியூட்டர்கள் அனைவரும் படத்தை பாராட்டினார்கள்.

மேலும் படத்தை வாங்குவதற்காக டிஸ்டிபியூட்டர்கள் பலரும் போட்டி போட்டனர். இந்த விஷயம் விஜயகாந்துக்கு தெரிந்து அவரும் ராவுத்தரும் தனியாக படம் பார்த்தார்கள். படத்தை பார்த்த விஜயகாந்த் நான் அப்போவே சொன்னேனே செந்தில் படம் நல்லா இருக்குனு கண்டிப்பா இந்த படம் ஹிட்டாகும் என்று சொன்னார். இப்படி பல தடைகளை தாண்டி வெற்றிபெற்ற பூந்தோட்ட காவல்கரான் படம் தான் நான் அடுத்து 30 படங்களை இயக்க உதவியாக இருந்தது என செந்தில்நாதன் கூறியுள்ளார்.
 

Leave a Reply